கோடிகளைக் குவிக்கும் கோல்ட்மேன் சாக்ஸ்

Tuesday, August 4, 2009


பொருளாதார
நெருக்கடி காரணமாக அமெரிக்கா பிஸினஸ் நிறுவனங்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு லாபம் சம்பாதித்து பெரும் "அதிர்ச்சி"யை ஏற்படுத்தியிருக்கிறது! கொஞ்சநஞ்சமல்ல. 11.4 பில்லியன் அமெரிக்கா டாலர் லாபம் சம்பாதித்திருக்கிறது!
இப்படி ஒரு லாபத்தை அந்த நிறுவனம் அதன் வாழ்நாளில் சம்பாதித்ததில்லை என்பது முக்கியமான விஷயம்!
கோல்ட்மேன் சாக்ஸின் இந்த அசாதரண வெற்றியை பார்த்து மாற்ற நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல, ஊழியர்களும் பொறாமையில் புழுங்கித் தவிக்கிறார்கள். காரணம் கொல்ட்மேனில் வேலை பார்க்கும் ஊழியர் ஒவ்வொருவருக்கும் சுமார் 7.70 லட்சம் அமெரிக்கா டாலர் போனஸாக கிடைக்கப் போகிறதாம்.
கோல்ட்மேன் நிறுவனம் தனது சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டிருக்க,மற்ற நிறுவனங்களோ இதன் பின்னணியில் பல தகிடுதத்தங்கள் நடந்திருப்பதாக சந்தேகம் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.

கவர்மென்ட் சாக்ஸ்!
கோல்ட்மேன் சாக்ஸ் வங்கிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் முன்பு சி..ஓவாக இருந்தார் ஹங்க் பால்சன். இவர் பிற்பாடு அமெரிக்க அரசாங்கத்தின் கருவூலச் செயலாளராக மாறினார். 2008 ஆகஸ்டில் லெமென் பிரதர்ஸ் வங்கி சிக்கலில் மாட்டியபோது ,இவர்தான் கருவூலச் செயலாளராக இருந்தார். லெமென் பிரதர்ஸ் வங்கி விழுந்த செய்தி வெளியான சில நாட்களுக்குள் "A.I.G. நிறுவனத்தை மீண்டும் உயிர்பிப்பதர்க்கான உதவியை அரசாங்கம் செய்யும் என்று அறிவித்தார் ஹங்க் பால்சன். அந்த நேரத்தில் அமெரிக்காவில் பல வங்கிகள் கடன் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்க A.I.G.க்கு மட்டும் அமெரிக்க அரசாங்கத்தின் உதவி எப்படி கிடைத்தது? காரணம் A.I.G. நிறுவனத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி பெரிய அளவில் முதலீடு செய்திருந்ததுதான் என்கிறார்கள்.

இன்சூரன்ஸில் குவிந்ததா!

கடந்த ஆண்டு வரை அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்தபோது விட்டாரா ஊர்பேர் தெரியாத நிறுவனங்களெல்லாம் வீடு கட்டி விற்க ஆரம்பித்தன,இப்படி விற்கப்பட்ட வீடுகளின் தரம் சரியில்லாமல் போனதால் அதை வாங்கியவர்கள் வீட்டைக்கட்டிக் கொடுத்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்க ஓடினார்கள்.ஆனால் வீட்டை விற்ற நிறுவனமோ, ஏற்க்கனவே காலி செய்திவிட்டு ஓடியிருந்தது.
இந்த நிலையில் வீட்டை வாங்கியவர் என்ன செய்வார்?கொஞ்சம் நஷ்டப்பட்டவது இன்னொருவர் தலையில் கட்டப் பார்ப்பார். அதுவும் நடக்கவில்லை என்றால் வீட்டுக்கான கடனைக் கட்டாமல் வீட்டை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவார்.இப்படி விட்டுப் போன வீடுகள் நாளுக்கு நாள் பெருக்கிகொண்டிருக்க இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் முழித்தன மற்ற நிறுவனங்கள்.
ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் புதிதாகக் கட்டிய வீட்டில் கட்டுமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்தால், அதிலிருந்த தப்பிக்க இன்சூரன்ஸ் செய்துகொண்டது. இதற்கான பிரிமியத்தை வீட்டுக்கடன் பெற்றவரிடமிருந்தே வசூல் செய்தது.பிரச்சனை என்று தன்னை யாரும் தேடி வந்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி அதற்கான நஷ்ட ஈட்டைப் பெற்று அதில் கொஞ்சம் பணத்தை வீட்டு வாங்கியவரிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை அப்படியே அமுக்கிவிட்டது என்று புகார் எழுப்புகிறார்கள். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இப்படிச் சேர்த்த பணம் பல லட்சம் டாலர் இருக்குமாம்.
இப்படிச் செய்வது தவறில்லையா என்று கேட்கலாம்.கோல்ட்மேன் சாக்சைப் பொறுத்தவரை இதெல்லாம் பிஸினஸ் சகஜம்தான் என்கிறார்கள்.கை நிறைய போனஸ் என்கிற அறிவிப்பால் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இன்று பரபரப்பான விளம்பரம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த பகட்டான விளம்பரமே நாளை அந்த நிறுவனத்துக்கு எதிராகவும் போகலாம்.வியாபாரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நன்றி :விகடன்

Comments

No response to “கோடிகளைக் குவிக்கும் கோல்ட்மேன் சாக்ஸ்”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails