நபிகள் காட்டிய பாதை

Thursday, October 29, 2009

இன்றைய உலக வழக்கில் ஒவ்வொருவரும் தத்தம் பெயருக்கு முன் "இனிஷல்" -பெயரின் முதல் எழுத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.அது அவரை பெற்ற தந்தையுடைய பெயரின் முதல் எழுத்தாகும்.இனிஷல் இல்லாமல் மொட்டையாகப் பெயரைக் குறிப்பிடும்போது "இன்னார்" என்று அறிந்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடும்.இன்னும் ஒரு படி கூடுதலாக சில பகுதிகளில் தம் வீட்டு பெயரை -வகையராவைக் குறிக்கும் முதல் எழுத்தையும் தந்தையுடைய முதல் எழுத்தையும் இணைத்து இனிஷலாக பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக ஆர்.கே.அப்துல்காதிர் என்ற பெயரிலுள்ள முதல் எழுத்து,ராமபட்டினம் வகையரா என்பதிலுள்ள முதல் எழுத்து 'ரா' ஆங்கிலத்தில் 'R' என்றும் அடுத்து தந்தை பெயர் காதர் முதிய்யுத்தீன் என்பதிலுள்ள முதல் எழுத்து 'கா' ஆங்கிலத்தில் 'K' என்றும் இனிஷலாக் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக அன்றாட நடைமுறைப் பழக்கத்தில் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்கலாகட்டும்,அல்லது தனிப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக எழுதிக் கொள்ளும் பாண்டு பத்திரங்கலாகட்டும், அதில் இன்ன ஊரை சேர்ந்த இன்னார் மகன் இன்னார் என்றும் பெண்ணாக இருந்தால் இன்னார் மகள் இன்னாள் என்றும்,இன்னார் மனைவி என்றும் குறிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த நடைமுறை எதோ உலக வழக்கில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு பொதுவான எல்லாராலும் ஏறக்கபபத்ட ஒரு நரைமுறை என்றும்,புனித இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் யாரும் கருதிவிடக்கூடாது.

ஒருவரைக் குறிப்பிடும் பொது அவருடைய பெயருக்கு முன்னாள் அவரைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நடைமுறை நாகரீகத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.

உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நாயகத் தோழர் ஹள்ரத் அபுதர்தாஉ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். (ஆதார நூல்கள் அஹ்மத்,அபூதாவுத்).

ஆக, இப்போது நடைமுறையில் இருந்து வரும் இனிஷல் நாகரீகம் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய நாகரீகம் தான்.என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் மூலம் ஒரு முஸ்லீம் ஆணோ-பெண்ணோ தன்னைப் பெற்றெடுத்த தந்தையுடைய பெயரின் முதல் எழுத்தையே தன் இனிஷலாக பயன்படுத்தவேண்டும். இதுதான் இஸ்லாமிய நாகரீகம், ஷரியத்தின் நடைமுறை என்பது தெளிவாக விளங்குகின்றது. இந்த நாகரீகம் அரபு நாடுகளிலும், மற்றும் முஸ்லீம் நாடுகளிலும் முறையாகப் பேணப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த உண்மையை ஒரு இஸ்லாமிய மாதப் பத்திரிக்கையில் வெளி வந்த சவூதியிலுள்ள அதன் வாசகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் உறுதி படுத்துவதைக் காணலாம். அவர் எழுதுகிறார். தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் தன் பெயருக்கு முன் கணவனின் பெயரில் வரும் முதல் எழுத்தையே இனிஷலாகப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சவூதியிலோ ஒரு பெண் குமரியானாலும்,திருமணமாகி ஒருவரின் மனைவியானாலும் அவர் தந்தையின் வாரிசாகவே அழைக்கப்படுகின்றார்!

நாம் வாழும் தமிழ்நாட்டில் துரதிர்ஷ்ட வசமாக முஸ்லிம்களில் சிலரோ -பலரோ ஒரு பெண்ணை மனமுடித்தவுடன் அது வரை அவள் பயன்படுத்தி வந்த அவளுடைய தந்தையின் இனிஷலை- பெயர் முதல் எழுத்தை தூர எறிந்துவிட்டு தான் உபயோகித்து வரும் தன்னுடைய இனிஷலை அல்லது தன் பெயரின் முதலெழுத்தை அவளுடைய பெயருக்கு முன் திணித்து விடுவதை நாகரீகமாக கருதி செயல்பட்டு வருகின்றனர்.அதற்க்கு இவர்கள் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டால் அவள் கணவனுக்குத் தான் சொந்தம். அவள் தந்தைக்கு அவள் மீது எந்த உரிமையும் இல்லை என்று தெரிந்தோ - தெரியாமலோ கருதிக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

காரணம் உங்கள் தந்தைமார்களுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு மறுமையில் நீங்கள் அழைக்கப் படுவீர்கள் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவிப்பு ஒரு பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கு அவளை ஒருவருக்கு மன முடித்துக் கொடுத்த கையோடு அவரது சொந்தமும் பந்தமும் முற்றுப் பெறுவதில்லை, மாறாக அவள் உயிரோடு வாழும் காலம்மட்டுமல்ல , மறுமையிலும் பெற்றவரின் சொந்தமும் , பந்தமும் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

தவிர தன் கணவனின் இனிஷளில் உலா வந்துக் கொண்டிருக்கும் ஒரு மனைவி தன் கணவன் இறந்துவிட்டாலோ அல்லது அவன் விவாகரத்து செய்து விட்டாலோ அல்லது அவனிடமிருந்து (குலஃ) மணவிலக்குப் பெற்றுக் கொண்டாலோ தொடர்ந்து அவனது இனிஷளில் உலா வர முடியாது. பிறகு வேறொருவரை மணமுடித்து அந்த கணவனின் இனிஷலில்..........! இப்படியே நிரந்தரமில்லாத இனிஷலில் ஒரு பெண்ணை உலா வரச் செய்வது கொஞ்சமும் நாகரீகமல்ல.

ஒரு ஆணுக்கு அவரது தந்தையின் பெயர் முதல் எழுத்து - இனிஷல் நிரந்தரமாக இருப்பது போன்றே ஒரு பெண்ணுக்கும் அவளது தந்தையின் பெயர் முதல் எழுத்து - இனிஷலே நிரந்தரமானதாகும். எனவே தான் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி என்று பாரபட்சம் காட்டாமல் ஆணோ - பெண்ணோ அவரவர் தந்தையின் பெயர் முதலெழுத்தை இனிஷலாகப் பயன்படுத்த சொல்லிய வழிகாட்டி, அதன் மூலம் அழகான முன் மாதிரியை நல்லதோர் நாகரீகத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அடுத்து பெண்களில் சிலர் தம் பெயர்களுக்குப் பின்னால் தம் கணவர்களின் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்வதை ஒரு நாகரீகமாகக் கருதி செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். தாங்கள் மணமானவர்கள் இன்னாருடைய மனைவி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக இப்படி செய்வதாக இருந்தால் அது ஏற்புடைய செயலாகக் கருத முடியாது. காரணம், எந்த ஆணும் தன் பெயருக்குப் பின்னால் தன் மனைவியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆணுக்கு இப்படியொரு தேவையில்லை என்கிற நிலையில் பெண்ணுக்கு மட்டும் அப்படியொரு தேவையை திணிக்க வேண்டுமா? என்பது குறித்து அறிவுலகம் சிந்திக்க வேண்டும்.

புனித இஸ்லாத்தில் எந்தப் பெண்ணின் மீதும் அவளது திருமணத்துக்குப் பின் அவள் கணவுடைய பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று விதி எதையும் ஏற்படுத்தவில்லை என்பதி உணர வேண்டும். புனித ஷரிஅத் ஏற்படுத்தியுள்ள இந்த அழகான நடைமுறைகளைப் புரிந்து விளங்கி, ஏற்று நடக்க வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

தொகுத்து வழங்கியவர். மவ்லவி,ஹாபிழ் ஆர்.கே.அப்துல்காதிர் பாகவி. இவர்கள் திருக்குர்-ஆன் மற்றும் நபிமொழி மொழிபெயர்ப்பாளர்.
துணைத்தலைவர்,நகர ஜமாஅத்துல் உலமா
பள்ளபட்டி.

உடல்
நலக் குறைவால் வீட்டோடு இருக்கின்றார்கள்.அவர்களுக்காக து செய்யுங்கள். உங்களுக்கு ஷரிஅத்தில் ஏதாகினும் சந்தேகம் இருந்தால் அவர்களை தொடர்பு கொள்ளலாம், சந்தேகமற்ற தெளிவான விளக்கம் கிடைக்கும். அவர்களை தொடர்பு கொள்ள -: 04320 - 241498 -: 91-9841170687

குறிப்பு:-
(அண்மையில் கீழக்கரை பள்ளிவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான 16,17,18 ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டில் "பெண்கள் அரபிய முறைபடி தந்தை பெயரைக் கூறி அவரது மகள் என்றே எழுதப்பட்டுள்ளனர்"-மணிச்சுடர்)

அழகே உன் விலை என்ன?

Tuesday, October 27, 2009

Artificial Island in Dubai

PALM ISLANDThe Palm Islands are artificial islands in Dubai , United Arab Emirates on which major commercial and residential infrastructure will be constructed. The islands are the largest land reclamation projects in the world and will result in the world's largest artificial islands. They are being constructed by Nakheel Properties, a property developer in the United Arab Emirates , who hired the Dutch dredging and marine contractor Van Oord, one of the world's specialists in land reclamation. The islands are the Palm Jumeirah, the Palm Jebel Ali and the Palm Deira.

The islands were commissioned by Sheikh Mohammed bin Rashid Al Maktoum in order to increase Dubai 's tourism. Each settlement will be in the shape of a palm tree, topped with a crescent, and will have a large number of residential, leisure and entertainment centers. The Palm Islands are located off the coast of The United Arab Emirates in the Persian Gulf and will add 520 km of beaches to the city of Dubai .

தொலைத்தூர கணினியை கட்டுப்படுத்தும் மென்பொருள்.

Monday, October 26, 2009


உங்களுடைய கணினியிலிருந்து வேறொரு கணினியை பர்க்ககூடியவர்களுக்கும் அதில் வேலைசெய்யக்கூடியவர்களுக்கும் உதவும் இந்த teamviewer
மென்பொருள் மிக உதவியாக இருக்கும்.
இது மிக எளிதாக இயங்கக்கூடியது, இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும் பின்னர் teamviewer icon மீது double click செய்யவும் wait for session ல் தோன்றுவது உங்களுடைய id மற்றும் password, உங்கள் partner கணினியில் wait for session ல் தோன்றும் id யை உங்கள் teamviewer ல் create session id ல் enter செய்யவும்,
தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும்.
இதில் இன்னொரு பயன் என்னவென்றால் இது trial verssion கிடையாது.instal செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இது மறு பதிவு.

குர்-ஆன்

Thursday, October 22, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு அருமையான தகவல்.
சிலர் கணினியின் முன்பு அதிக நேரம் இருப்பவர்களாக நம்மில் பலர் உள்ளனர்.அவர்களுக்காகவே இந்த பதிவு இன்று நான் எடுத்துக் கொண்டது குர்-ஆன் பற்றியது.
இன்றைய காலகட்டத்தில் குர்-ஆன் ஓத தெரிந்தவர்கள் சரிவர குர்-ஆனை ஓதுவது கிடையாது.கேட்டால் நேரம் கிடைப்பதில்லை என்று சாக்கு போக்கு சொல்லிகொள்கிறோம். குர்-ஆன் ஓதுவது எவ்வளவு சிறப்பு என்று நான் சொல்லத் தேவை இல்லை ஏனெனில் இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
குர்-ஆன் ஓதுவதை கூட நாம் காது கொடுத்து கேட்பதுமில்லை.எனவே என்னை போன்ற பலரும் பயன்பெறும் வகையில் உதவக்கூடிய இந்த விசுவல் குர்-ஆனை உங்களுக்கு அளிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன். குர்-ஆனை மனனம் செய்த ஹாபிஃல்களுக்கு மிக மிக உதவும் என்றும் நம்புகின்றேன். குர்-ஆன் ஓதும்போது கீழே மலாய் அல்லது ஆங்கிலத்தில் விளக்கம் வரும்.
கீழே உள்ள காணொளியை பாருங்கள்.

தயவுசெய்து இஸ்லாமிய நண்பர்களுக்கு இந்த விஷயத்தை எத்திவையுங்கள்.இந்த குர்-ஆன் மிக அறிய ஒன்று.

கீழே உள்ள சுட்டியை தட்டி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

Link1

Link2

Link3

Link4

Link5

Link6

Link7

Pass: tamilbazaar.blogspot.com

தரவிறக்கம் செய்தவர்கள் CD யில் காப்பி செய்து கணினியில் உபயோகியுங்கள்.உங்களுக்கு எதாகினும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

தரவிறக்கம் செய்பவர்கள் ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்யுங்கள் ஏனெனில் ஒரு சிலர் முதல் பாகத்தை மட்டும் தரவிறக்கம் செய்கின்றனர்.ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்தால் மட்டுமே முழுமையடையும்.
தரவிறக்கம் செய்தபின்னர் எப்படி விரிவிபடுத்துவது என்பதை காண இங்கே.

தொழுகையை தவறவிடாமல் இருக்க மென்பொருள்

உங்கள் கோப்புகளை வேகமாக காப்பி செய்ய மென்பொருள்

Wednesday, October 21, 2009

உங்கள் கோப்புகளை வேகமாக காப்பி செய்ய உதவும் இந்த மென்பொருள் பெயர் teracopy


ஒரு
drive லிருந்து வேறொரு drive க்கு copy செய்யும்போது வேகமாக காப்பி செய்யும் .இதனால் உங்கள் நேரமும் மிச்சமாகும்.Buffer size தேவையான அளவுக்கு அதிகமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்ய
உபயோகப்படுத்திபாருங்க உங்கள் கருத்தை சொல்லுங்க

வின்ரேர்

Tuesday, October 20, 2009

Winrar ல் extract செய்து உபயோகிப்பது பற்றி அனைவரும் தெறிந்த விஷயந்தான்.இருந்தாலும் இதைப்பற்றி தெரியாதவர்களுக்காக இந்த பதிவு தெரிந்தவர்கள் படித்துவிட்டு குறை இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
பொதுவாக ஒரே ஒரு பைலை extract செய்வது எல்லோருக்கம் தெரிந்ததே,அதே சமயம் ஒரு பைல் ஒன்றுக்கும் மேல் பாகத்தைக் கொண்டிருந்தால் அதை எப்படி extract செய்வது.
பார்ப்போம்.............. extract செய்ய வேண்டிய பாகம் எத்தனை என்று தெரிந்துக் கொண்டு அனைத்து பாகத்தையும் தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.தரவிறக்கம் செய்த பகுதிகளை ஒரு போல்டரில் சேமித்துக் கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்தது இரண்டு பாகம் என்று உதரனத்திற்க்கு எடுத்துக் கொள்வோம்.இந்த winrar மென்பொருளையே உங்களுக்கு உதாரணமாக கீழே கொடுக்கின்றேன்.தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்ய
பாகம் 1
பாகம் 2
இவ்வாறாக இருக்கும்.
winrar_4.6_full.part1.rar
winrar_4.6_full.part2.rar

இதில் ஏதாவதொரு பைலின் மெது வலது க்ளிக் செய்து Extract Here என்பதை select செய்யவும்.Extract ஆகிவிடும்.
Extract செய்யும்போது ஏதாவது Error mesege வந்தால் நீங்கள் தரவிறக்கம் செய்ததில் ஒரு பாகம் விடுபட்டிருக்கலாம்,அல்லது பைல் corrupte ஆகியிருக்கலாம்.மீண்டும் ஒரு முறை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.Extract செய்யும்போதே என்ன தவறு உள்ளது என்று messege கட்டத்தில் தெரியும்.

ஒரு சில பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்திருப்பார்கள்.பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே Extract செய்யமுடியும், Extract செய்யும்போது பாஸ்வேர்ட் கொடுக்கவேண்டிய போல்டராக இருந்தால் கீழே உள்ள படத்தை போன்று தெரியும்.
பாஸ்வேர்ட் கொடுத்து ok கொடுக்க வேண்டியதுதான்.

Winrar மென்பொருள் தரவிறக்கம் செய்ய இங்கே


கஃபத்துல்லாஹ்

Thursday, October 15, 2009

இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள்.

Wednesday, October 14, 2009

இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு உதவும் இந்த IDM மென்பொருள் install செய்வதற்கு மிக எளிதானது.
தரவிறக்கம் செய்ய
மேலும் youtube போன்ற வீடியோ பைல்களை தரவிறக்கம் செய்ய உதவுகின்றது.படத்தை பார்த்தால் புரியும்.
இதில் முக்கியமான ஒன்று தரவிறக்கம் செய்யும் போது Pause செய்துக்கொள்ளலாம் தேவையெனில் Resume செய்துக்கொள்ளலாம் விட்ட இடத்திலிருந்து தரவிறக்கம் செய்யும்.சில பைல்கள் பெரியதாக இருக்கும் அவைகளை சிறிது சிறிதாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.மின்சார தொல்லை ,இணைய பிரச்சினை போன்ற சமயங்களில் இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.


தரவிறக்கம் செய்து winrar ல் extract செய்துக்கொள்ளவும் .


idman515. exe பட்டனை க்ளிக்கவும் ,install முடிந்தவுடன் திரையில் அடுத்து வரும் படம் தோன்றும்.

மூடிவிடுங்கள்.

taskbar ல் உள்ள IDM icon யை

வலது க்ளிக் செய்தி exit கொடுக்கவும்.
பிறகு patch folder ல் உள்ள keygen.exe copy செய்து
c:\Program Files\Internet Download Manager ல் paste செய்யவும்.
copy செய்த keygen.exe கோப்பை இரண்டுமுறை க்ளிக்கவும்.


அதில் உள்ள register பொத்தானை க்ளிக்கவும்.
இப்பொழுது உங்கள் IDM மென்பொருள் full version ஆகிவிட்டது,
இதில் முக்கிய விஷயம் ட்பிஜூயீ அப்டேட் செய்யக்கூடாது.
சில சமயம் தானாகவே அப்டேட் கேட்க்கும் cancel கொடுத்துவிடுங்கள்.
மறந்து அப்டேட் கொடுத்துவிட்டால் keygen.exe என்பதை run செய்து register pattanai அழுத்தவும்.

இது மறு பதிவு.

விண்டோஸ் டெஸ்க்டாப் மீட்டர் Rainmeter

Monday, October 12, 2009


இது Desktop பில் இருக்கவேண்டிய அருமையான மீட்டர்.உங்களுடைய Cpu Speed,Virtual memory, மற்றும் ட்ரைவ்களின் கொள்ளளவு போன்றவைகளை காட்டக்கூடியது,இணைய இணைப்பில் இருக்கும்போது எவ்வளவு Download and Upload ஆகியுள்ளது போன்றவைகளையும் காட்டும் .

Rain meter
Rainmeter is a customizable resource meter that can display various performance data in different formats. Rainmeter can measure:
  • CPU load
  • Allocated Memory
  • Network Traffic
  • Performance data
  • Uptime
  • Free disk space
  • ...and plenty of other stuff
தரவிறக்கம்.

depositfiles.com/en/files/0m60h8w5f

விளையாடலாம் வாங்க பாகம் 5 Super Bike

Wednesday, October 7, 2009

இந்த விளையாட்டை யாராவது விளையாடும்போது நாம் பார்க்க நேர்ந்தால் நாமும் ஒரு முறையாவது விளையாட வேண்டும் என்ற ஆசை வரும், அந்த அளவிற்கு இந்த விளையாட்டு அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கின்றது.
நீங்களும் ஒரு முறை விளையாடிபாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் இந்த விளையாட்டு பிடிக்கும்.
தரவிறக்கம் செய்ய
அல்லது
http://depositfiles.com/en/files/4p04blk6i
தரவிறக்கம் முடிந்தபின்னர் instal செய்வது எப்படி என்பதை இந்த pdf file ல் கொடுத்துள்ளேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

உங்களுக்கு instal செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் எனவே தயவு செய்து pdf file லை தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள் குறை இருந்தால் சரியாக்க எனக்கு உதவும்.Related Posts with Thumbnails