பங்கு சந்தை காளையா கரடியா?

Wednesday, August 26, 2009

இல்லை அது ஒட்டகம்.
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் திங்களன்று ஏறும் வார இறுதி வெள்ளியன்று இறங்கும் என்கின்றன நிலைமை ஒரு கட்டை விரல் விதி (Thump rule) போலிருந்தது.இப்போது நிச்சயமாக அப்படி இல்லை,என்று வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நிகழலாம்!
இன்றைய சந்தை உலகில் வர்த்தகம் நடைபெறுவது காளை போலவும் இல்லை கரடி போலவும் இல்லை,ஒட்டகம் போல, குதித்து குதித்து போகும் சவாரியை போல் ஒத்திருக்கிறது, ஒட்டகத்தின் கால்கள் வலுவாக இருக்கின்ற பட்சத்தில் நீண்ட பயணத்தைப் பற்றி கவலைப் பட தேவை இல்லை.
சரியான நேரத்தில் சரியான பங்கை தேர்ந்தெடுங்கள், பொறுமையை கடைபிடியுங்கள்.
உங்களுக்காக பொறுமையின் மகத்துவத்தை அறிய ஒரு உதாரணம்...!
ஷேர்களில் உதாரணம் என்றாலே இன்றைக்கு எவருக்கும் சொல்லத் தோன்றுவது இன்போசிஸ்தான் ,நம்மைப் போன்று சிருமுதலீட்டாளர்களையும் மதித்து, அனைவரையும் பலன் அடையச் செய்யும் நிறுவனம்!
1981 ல் ஒரு தனியார் நிறுவனமாகச் சிலரால் சேர்ந்து தொடங்கப் பெற்ற இன்போசிஸ் ,1993 ல் தான் முதல் IPO(Initial Public Offen) வெளியிட்டார்கள். அதுசமயம் அவர்களுடைய 10 ரூபாய் பங்குகளை 85 ரூபாய் கூடுதல் விலை வைத்து வெளியிட்டார்கள். விண்ணப்பம் போட்டவர்களுக்கெல்லாம் கிடைத்தது.இது வைரக்கல் என்று தெரியாத நேரம்.நம்மைப் போல் ஒருவர் 100 ஷேர் விண்ணப்பித்து பெற்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய முதலீட்டு 100*95=9500ரூபாய்.
அந்த நிறுவனம் இன்றைய தேதி வரை ஏராளமான டிவிடெண்டுகள் போனஸ் ஷேர்கள் கொடுத்திருக்கிறது. இதில் போனஸ் ஷேர்களின் கக்கை மட்டும் பார்த்தால் ......
மேலே கூறியது போல் ஒருவர் ரூபாய் 9500 க்கு 100 ஷேர் வாங்கி முதலீடு செய்திருந்தால் கணக்கை சரியாக கவனியுங்கள்.
1994 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள்,100 ஷேர் 200 ஷேர் ஆகியிருக்கும்.
1997 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள், 200 ஷேர் 400 ஷேர் ஆகியிருக்கும்.
1999 ல் ஒரு பங்குக்கு ஒரு பாங்கு போனஸ் கொடுத்தார்கள், 400 ஷேர் 800 ஆகியிருக்கும்,
2000 ம வருடம் முகப்பு விலை 10 ஆக இருந்ததை 5 ந்தாக பிரித்தார்கள் (share spolit) அதனால் 800 பத்து ரூபாய் பங்குகள் 1600 பங்குகள் 5 ரூபாய் பங்குகளாக மாறியிருக்கும்.
2004 ல் ஒரு பங்குக்கு மூன்று இலவசப் பங்குகள் கொடுத்தார்கள். இதன்படி பாங்கு எண்ணிக்கை 1600 லிருந்து 6400 ராக ஆகியிருக்கும்.
2006 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள். மொத்த பங்குகள் 6400 இரு மடங்காகி 12800 பங்குகள் இருக்கின்றது.
போட்ட முதலீடு 9500 ரூபாய், 2007 ல் ஒரு இன்போசிஸ் பங்கு ரூபாய் 2250 க்கு வர்த்தகமாகிக்கொண்டிருந்தது, மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு என்ன தெரியுமா கணக்கு போடலாமா? 2,88,00,000.00 ரூபாய்.சத்தியமாக எழுத்துப் பிழை இல்லைங்க,இரண்டு கோடியே என்பதி எட்டு லட்ச ரூபாயே தான்.
இதிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் பொறுமையின் மதிப்பு எவ்வளவு பயனுள்ளது என்று. சரி இப்பொழுது வர்த்தகம் நடைபெறும் பங்குகளில் வைரக்கல் பங்கு எது என்று தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் தெரியாவிட்டால் கொஞ்சம் பொறுத்திருங்கள் வேறு பதிவில் பார்ப்போம்.


பங்கு சந்தையில் வணிகம் செய்ய உதவும் பதிவுகள்.
முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை
பங்குசந்தை வெற்றிப் பயணம் - இன்ட்ரெஸ்டிங்கான இரண்டாவது பாதை.
பங்குச்சந்தை வெற்றிப் பயணம்! முகமறியாதவர்களின் மூன்றாவது பாதை!Comments

7 Responses to “பங்கு சந்தை காளையா கரடியா?”
Post a Comment | Post Comments (Atom)

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

August 26, 2009 at 2:59 PM
sakthi said...

மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு என்ன தெரியுமா கணக்கு போடலாமா? 2,88,00,000.00 ரூபாய்.

பெரூமூச்சு தான் வருது

August 26, 2009 at 4:16 PM

வாங்க சக்தி
அது பொறுமைக்கு கிடைத்த பரிசு.

August 26, 2009 at 4:34 PM
Maximum India said...

கார்பரேட் இந்தியாவின் மதிப்பை பெருமளவுக்கு உயர்த்தியது இன்போசிஸ் என்றால் மிகையாகாது.

இன்போசிஸ் போன்ற பங்குகள் இப்போது கிடைப்பது அபூர்வம். இருந்தாலும் தேடித் பார்ப்போம்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

August 26, 2009 at 7:21 PM

//Maximum India said... //
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்.

August 26, 2009 at 8:24 PM
Thomas Ruban said...

//பங்கு சந்தை காளையா கரடியா?
இல்லை அது ஒட்டகம்.

இது என்ன புதுக்குழப்பம்.

(இப்போது இருக்கும் பங்குச்சந்தை உயர்வே காளையா? கரடியா?என்று தெரியவில்லை.)

இன்போசிஸ் போன்ற(அபூர்வ) பங்குகள்ளை வைத்து இப்போது இருக்கும் பங்குச்சந்தையை எடை போடக்கூடாது.(அது ஒரு கனாக்காலம்)

அமெரிக்காவில் கிரெடிட்கார்ட் பூதம் கிளம்ப நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது.அமெரிக்கா,சீனா இடையே டாலர்யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

August 27, 2009 at 4:34 PM

//Thomas Ruban said... //
//பங்கு சந்தை காளையா கரடியா?
இல்லை அது ஒட்டகம்.

இது என்ன புதுக்குழப்பம்.//
பங்கு சந்தையை ஒட்டகத்திற்கு ஒப்பிட்டத்தின் காரணம் சந்தை வேகமாக கீழே இறங்குவதும் மேலே ஏறுவதும் மிக அரிதான ஒன்று.பொதுவாக சந்தை குதித்து குதித்து செல்லும்,எனவேதான் ஒட்டகத்திற்கு ஒப்பிட்டேன்.
//இன்போசிஸ் போன்ற(அபூர்வ) பங்குகள்ளை வைத்து இப்போது இருக்கும் பங்குச்சந்தையை எடை போடக்கூடாது.(அது ஒரு கனாக்காலம்)//
இன்போசிஸ் அபூர்வ பங்குதான்,அதேசமயம் இன்னும் பல அபூர்வ பங்குகள் நம் முன் இருக்கிறது.அதை தேடுவதுதான் கடினம்.
நன்றி தமஸ் ரூபன்

August 27, 2009 at 5:10 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails