இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்

Wednesday, December 1, 2010

காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தளம் சிறந்து விளங்கும். Depositfiles தளம் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஒரு சில குறைகளை நீக்கிவிட்டார்களேயானால் File Hosting தளத்தில் முன்னணிக்கு வந்துவிடும்.

இன்று முத்தான மூன்று தளங்களை பார்ப்போம்.

1 .Hotfile
சில ஆண்டுகளாகவே Upload செய்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான தளம். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே இந்த தளம் பணம் சம்பாதிக்க மிக சிறந்த தளமாக இருக்கின்றது.
இந்த தளத்தில் தினமும் 5 GB வரை Remote Upload செய்யலாம்.(Remote Upload பற்றி ஏற்கனவே பலமுறை விளக்கியுள்ளேன் மேலும் சில விசயங்களை பதிவின் இறுதியில் பார்க்கலாம்)

இந்த தளத்தின் முக்கிய குறை Rank தான். அதேசமயம் மிக பயனுள்ள விசயமும் இந்த Rank தான். கீழேயுள்ள படத்தை பாருங்கள் புரியும்.
அதிகமான தரவிறக்கம் கிடைத்தால் நம்முடைய Rank கும் அதிகமாகும்.

Premium Account வைத்திருப்பவர்களில் அதிகமானோர் Hotfile லில் உள்ளனர்.எனவே Hotfile லில்  Upload செய்தால் தரவிறக்கம் நிச்சயம். அதேசமயம் Premium Account இல்லாதவர்கள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்தபின்னர் அடுத்த தரவிறக்கத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் Upload செய்யும் கோப்புகளுக்கு காலவரையறை கிடையாது.சில கோப்புகளை புகாரின் அடிப்படையில் அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில் செய்துவிடுவார்கள்.

2. Fileserve
இந்த தளத்தை பற்றி ஏற்கனவே இதற்க்கு முந்தய இரண்டு பதிவுகளில் விளக்கியுள்ளேன்.இந்த தளம் தற்சமயம் அனைவராலும் மிகவும் விரும்பபடுகின்ற தளங்களில் ஒன்று, இந்த தளத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. வேறு எந்த File Host டிங்கும் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்ததாக இல்லை. இந்த தளத்தை ஆரம்பித்து  சில மாதங்களே ஆகியுள்ள நிலைமையில் இன்று இதனுடைய Alexa Rank  - 121.

நம்முடைய கோப்புகளை சேமித்து வைப்பதற்கு 500 GB வரை இடம் கிடைக்கின்றது. இதிலும் கோப்புகளுக்கு காலவரையறை கிடையாது, சில கோப்புகளை புகாரின் அடிப்படையில் அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில் செய்துவிடுவார்கள், 500 GB க்கும் மேல் சென்றால் உங்கள் கோப்புகளில் எவையவை கடந்த 30 நாட்களாக தரவிறக்கம் ஆகவில்லையோ அவைகளை அகற்றிவிடுகிறார்கள், நீங்கள் Premium கணக்கு வைத்திருந்தாள் எவ்வளவு கோப்புகள் வேண்டுமானாலும் சேமித்துக்கொள்ளலாம்.

இந்த தளத்திலும் Premium Account உள்ளவர்கள் அதிகமுள்ளனர். Premium கணக்கு இல்லாதவர்கள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்க செய்ய காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவே  அதிகமான தரவிறக்கம் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த மாதம் தளத்தை Upgrade அடிக்கடி செய்ததால் சில சமயம் தரவிறக்கம் செய்பவர்களுக்கு தொந்தரவாக இருந்தது, தேவையான அளவிற்கு Upgrade செய்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது எனவே இதன் வளர்ச்சி இன்னும் சில நாட்கள் தொடரும்.

எந்த ஒரு தளமும் அதன் வளர்ச்சிக்காக பணத்தை அள்ளிக் கொடுக்க தயங்குவதில்லை, அதே சமயம் வளர்ந்துவிட்டால் அதனிடமிருந்து பணம் சம்பாதிப்பது கம்மியாகிவிடும்,(இதற்க்கு எடுத்துக்காட்டு Rapidshare சில மாதங்களாக  நீத்மன்றங்களின் வழக்கால் இன்று மிகவும் பின்தங்கிவிட்டது. இந்த தளம் இன்னும் சிறிது காலத்தில் காணாமல் போய்விடும் என்பது என் தனிப்பட்ட கருத்து.)

எனவே இந்த சமயம் சம்பாதிக்க ஏற்ற தளமாக இருக்கின்றது. சரியாக பயன் படுத்திக்கொள்ளுங்கள், ஒருசிலர் 200 க்கும் அதிகமான கோப்புகளை Upload செய்து பணம் ஏதும் சம்பாதிக்காமல் உள்ளனர்.ஏதேனும் உதவி தேவையெனில் gtalk மூலமாக அழைக்கலாமே.............!

3. Filesonic

இந்த தளம் கடந்த மூன்று மாதங்களில் சில பல குளறுபடிகளில் இருந்து மீண்டுவந்துள்ளது.தற்சமயம் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.முந்தய குளறுபடிகளால் பலர் இந்த தளத்தை தவிர்த்துவிட்டார்கள்.மீண்டும் பழைய வாடிக்கையாளர்களை பெற சிறிது காலமாகலாம்.இந்த தளத்தில் கோப்புகளுக்கு காலவரையறை 30 நாட்கள் மட்டுமே இந்த குறையும் இல்லாமலிருந்தால் Fileserve போன்று இந்த தளம் வேகமாக வளர வாய்ப்புள்ளது.

நண்பர்களே நீங்கள் Upload செய்து பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களின் link குகளை கொடுங்கள் ஒவ்வருவருக்கும் ஒரு தளம் பிடித்திருக்கும். அவர்களுக்கு பிடித்த தளத்தின் லிங்க் இருந்தால் உங்களுக்கு தரவிறக்கம் அதிகமாக இருக்கும்.நான் மூன்று முதல் ஆறு தளங்களின் லிங்க் குகளை கொடுக்கின்றேன், எனவே எனக்கு அதிகமான தரவிறக்கம் ஆகுவதால் பணமும் அதிகமாக கிடைக்கின்றது.

பணம் சம்பாதிக்க விரும்புவோர் கீழே உள்ள என்னுடைய Referral மூலமாக இணையுங்கள் மேலும் பல நுணுக்கமான விசயங்களை gtalk மூலமாக உங்களுக்கு கிடைக்கும். சந்தேகம் உள்ளவர்கள் gtalk மூலமாக தொடர்புகொள்ளவும். சந்தேகத்தை தீர்க்க எனக்கு வசதியாக இருக்கும்.
Hotfile.com -        Alexa Rank - 62
Fileserve.com-     Alexa Rank -121
Filesonic.com-      Alexa Rank - 309
Depositfiles.com- Alexa Rank -168
Oran.com-            Alexa Rank -1,102
Easy-share.com-  Alexa Rank -1,002
Uploading.com-    Alexa Rank - 412
Join-Duckload -   Alexa Rank-1514
Premium கணக்கு இல்லாமல் Remote Upload செய்வதை பற்றி ஒரு சிலருக்கு கூறியுள்ளேன் மிக நன்றாக செய்கின்றார்கள். மேலும் பலர் தொடர்புகொண்டு தங்களின் வருமானத்தை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். கண்டிப்பாக Referral மூலமாக இணைந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். புதியதாக இணைபவர்கள் தொடர்புகொண்டபின்னர் இணையுங்கள்.

என்னுடைய gtalk ID

gtalk மூலமாக தொடர்புகிடைக்காதவர்கள் மெயிலிடுங்கள். ஏனெனில் எனக்கும் தற்சமயம் அதிகமாக வேலைகள் உள்ளன, சில சமயம் இணையத்தில் இல்லாமல் போகலாம்.கருத்துகளை மட்டுமே பின்னூட்டமிடுங்கள். சந்தேகத்தை பின்னூட்டத்தில் கேட்காதீர்கள்,gtalk மூலமாக கேளுங்கள்.

நன்றி.

இணையத்தில் பணம் பாகம் 10 பணத்தை அள்ளித்தரும் தளம்.

Friday, November 5, 2010


நான் ஏற்கனவே சொல்லியதுபோல் Fileserve இன்று மிக வளர்ந்துவிட்டது.அதன் வளர்ச்சி மிக வேகமாக இருக்கின்றது.

இதற்க்கு முந்தய பதிவான இணையத்தில் பணம் பாகம் 9 வளரும் File Hosting தளங்கள். பதிவில் Fileserve பற்றி எழுதியிருந்தேன். அந்த சமயம் Fileserve வின் Alexa Rank 4000 திறக்கும் அதிகமாக இருந்தது.

இன்று Alexa Rank 145

என்னுடைய Referral மூலமாக இணைந்த ஒரு நண்பர் எனக்கு இன்று காலை ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.அதில் அவர் கடந்த வாரத்தில் சம்பாதித்த வருமானத்தின் படத்தை அனுப்பி இருந்தார்.

அவர் அனுமதியுடன் அந்த படம் உங்கள் பார்வைக்கு.
படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்.

அவருடைய Hotfile லின் வருமான படம்.

என்னுடைய Referral லில் இணைந்ததற்கான Fileserve வின்  Proof .

Hotfile Proof


இவர் ஒருவர் மட்டுமே தற்சமயம் Fileserve வில் (என்னுடைய Referral லில் சேர்ந்த ) பணத்தை சம்பாதிக்கின்றார்.என்னைவிட அதிகமாகவே சம்பாதிக்கின்றார்.

ஒரு நாளைக்கு சுமார் 7 டாலர் Fileserve வில் மட்டும் சம்பாதிக்கின்றார் மற்ற தளங்களில் (எவ்வளவு என்று தெரிவிக்கவில்லை) எல்லா தளங்களிலும்  சேர்த்து ஒரு 7 டாலர் என்று வைத்துக் கொள்வோம். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 14 டாலர் என்றால் ஒரு மாதத்திற்கு 412 டாலர் இந்திய மதிப்பில் 412 X 44.00 =18128.00 ரூபாய் சம்பாதிக்கின்றார்.

எனக்கும் வேறு பல வேலைகள் இருந்ததால் என்னால் இணையத்தில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை.


என்னுடைய வருமானத்திற்கான Proof
Fileserve
 நான் வெறும் 274 கோப்புகளை மட்டுமே Upload செய்துள்ளேன்.நண்பர் 1017 கோப்புகளை Upload செய்துள்ளார்.

Hotfile
கடந்த வாரத்தின் Proof
அதற்க்கு முந்தய வாரம்.



மூன்று வாரத்திற்கு முன்  ஒரு சில டிப்ஸ் மட்டும்தான் இவருக்கு கொடுத்தேன். இன்று இவருடைய வருமானம் பெருகிவிட்டது.

இவ்வளவு நாளாக பல நண்பர்களுக்கு Teamviewer மூலமாக பல மணிநேரம் சொல்லிக் கொடுத்து எந்த பலனும் இல்லை என்று இருந்த நேரத்தில் இவருடைய  மெயில் எனக்கு சந்தோசத்தை அளிக்கின்றது.



இன்றைய நிலைமையில் Depositfiles .கம விட Fileserve அதிகமாக தருவதாக தெரிகின்றது. 500 GB வரை இடம் தருகின்றார்கள்.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்.

அவருக்கு கொடுத்த அந்த டிப்ஸ் உங்களுக்கு வேண்டுமாயின் நீங்கள் என்னுடைய Referral மூலமாக கீழே கொடுத்துள்ள அனைத்து தளங்களிலும் இணைத்திருக்க வேண்டும்.

மேலும் அவைகளில் நீங்கள் குறைந்தது  5 டாலராவது சம்பாதிதிருக்கவேண்டும்.ஏனெனில் ஒரு சிலர் இணைந்து பல விசயங்களை தெரிந்துகொண்டு வேறொரு கணக்கில் வருமானமீட்டுகின்றார்கள்.அது எனக்கு மனவருத்தத்தை கொடுக்கின்றது. மேலும் இதனால் என்னிடம் இருந்து வேறு சில டிப்ஸ் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

நான் சொல்லிக்கொடுப்பது எனக்கும் வருமானம் வரவேண்டும் என்ற லாப நோக்குடன்தான்.விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இணையுங்கள். உங்கள் வருமானம் எவ்வளவோ அதில் 15 % முதல் 25 % வரை  எனக்கு கமிஷன் கிடைக்கும் இதனால் உங்கள் வருமானம் குறையாது அந்த தளம் எனக்கு தரும் கமிஷன்.

FileSonic.com - Free, simple and fast file hosting!


FileServe

Join Uploading.com today!

நன்றி.

இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி.

Friday, September 10, 2010


அன்புடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமுன் அழைக்கும்.

ஒரு மாத காலம் இறைவன் கட்டளையை ஏற்று நோன்பு இருந்து கெட்டவைகளை தவிர்த்து  நல்ல செயல்களை மட்டுமே செய்து இறைவனின் பேரன்புக்கு ஆளாகி இருக்கும் இந்த பொன்னானா நாளில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றோமோ அது போல் அனைத்து நாட்களிலும் நாம் சந்தோசமாக இருக்க இறைவன் கட்டளையை தவறாமல் நிறைவேற்றினாலே போதும்.

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள்.

கடந்த இரண்டு மாத காலமாக பதிவு எதுவும் போடவில்லை என்று பல நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டவன்னமாக உள்ளானர் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

சில சொந்த வேலையின் காரணமாக பதிவுகள் எழுத முடியவில்லை. அடுத்ததாக ரமலான் மாதம் வந்துவிட்டது இந்த சிறந்த மாதத்தின் கடமைகளை செய்ய வேண்டிய கடமைகள் உள்ளதால் இணையத்தின் பக்கம் வர முடியவில்லை.

இந்த சிறப்பான தினத்தில் ஒரு அருமையான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.

என்னடைய சிங்கபூர்  நண்பர் முஸ்தபா சமீபத்தில் ஒரு ஈ-மெயில் அனுப்பியிருந்தார்.
ஒரு தளத்தின் முகவரியை கொடுத்து அதனை பற்றிய விளக்கங்களுடன் இருந்தது.

அந்த தளத்தை பற்றி பார்ப்போம்.

தளத்தின் பெயர் :- http://tanzil.info/

இஸ்லாமியர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான தளம். இந்த தளந்த்தில் குர்-ஆன் முழுவதும் விளக்கங்களுடன் உள்ளன Play செய்து கேட்கும் வசதியும் உள்ளது.


 படத்தை பெரியதாக பார்க்க இங்கே சுட்டவும்.

சுமார் 80 க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு.23 காரிகளின் ஓதுதலை கேட்கும் வசதி.ஓடும்போதே அதன் விளக்கத்தை அறிந்துகொள்ளும் வசதி (தமிழும் உள்ளது) மேலும் பல வசதிகள் உள்ள இந்த தளத்தை ஒரு முறை இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் அந்த தளத்தின் அனைத்து சிறப்புகளையும் அறிந்துகொள்ளமுடியும்.

குர்-ஆன் பற்றிய அறிந்து கொள்ள ஆசைபடும் மற்ற மதத்து நண்பர்களுக்கும் மிக பயனளிக்கும் இந்த தளத்தை முடிந்தவரை அனைத்து நண்பர்குளுக்கும் அறிமுகப்படுந்துங்கள்.

விளையாடலாம் வாங்க பாகம் 12

Wednesday, July 14, 2010



விளையாடுவதற்கு மிக அருமையான விளையாட்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட தூண்டும் இந்த விளையாட்டை(Zuma Deluxe) எப்படி கணினியில் Instal செய்வது என்று பார்ப்போம்.

ZumaSetup.exe என்ற கோப்பை முதலில் Run செய்யவும்.கீழே கொடுத்துள்ள படங்களின் வரிசைப்படி வரும்.

Next கொடுக்கவும்.



I Agree கொடுக்கவும்.


மறக்காமல் கட்டத்தில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிடவும்.இல்லையெனில் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும். டிக் மார்க்கை எடுத்துவிட்டு Done செய்யவும்.

அடுத்து இரண்டாவதாக உள்ள Popcap Zuma Deluxe என்ற கோப்பை ரன் செய்து Instal செய்யவும்.
அவ்வளவுதான்.

ஒரு சிறு பயணம் உள்ளதால் நான் வரும் வரை இந்த விளையாட்டை விளையாடி மகிழுங்கள்.பயணத்தின்போது நேரமிருந்தால் இணையத்தில் வருகின்றேன்.

(இணையத்தில் தேடியபோது கிடைத்த LINK)

வீடியோ பார்க்க மேலும் ஒரு ப்ளேயர்..

Monday, July 12, 2010

வீடியோக்கள் பார்க்க மிக அருமையான Player இந்த BS Player  நீங்களும் ஒரு முறை முயற்சித்துபாருங்கள்.இது Portable Version ஆகும். கணினியில் Instal செய்ய அவசியமில்லை.

இணையத்தில் பணம் பாகம் 9 வளரும் File Hosting தளங்கள்.

Friday, July 9, 2010



Upload செய்து இணையத்தில் பணம் சம்பாதிக்க மிக உகந்த தளமாக Depositfiles.com உள்ளது அனைவரும் அறிந்ததே.Depositfiles.com மிற்கு அடுத்ததாக Hotfile.com , Uploading.com உள்ளது.

இந்த வரிசையில் மேலும் இரண்டு தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றேன். இந்த தளங்கள் வளருவதற்கு காரணம் Rapidshare ன் மோசடிதான். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.உண்மை என்னவெனில் rapidshare தளம் அதிகமான பிரிமியம் கணக்கை முடக்கியதுடன் அந்த தளம் Upload செய்பவர்களுக்கு எந்த பயனளிக்கும் செயலையும் செய்யவில்லை.

Rapidshare ரில் நீங்கள் Upload செய்தால் அவர்கள் உங்களுக்கு கொடுப்பது வெறும் Points மட்டுமே.அதை வைத்துக்கொண்டு பிரிமியம் கணக்கை மட்டும்தான் பெறமுடியும்.என்னிடம் சுமார் 44 பிரிமியம் கணக்கு இருந்த நிலைமையில் என்னுடைய கணக்கையும் Bane செய்துவிட்டார்கள். காரணம் கேட்டதற்கு உங்களுடைய கணக்கு  பல IP யில் இருந்து தரவிறக்கம் செய்யப்படுகின்றது என்று காரணம் கூறுகின்றார்கள்.ஏற்கனவே இரண்டு முறை இவ்வாறு செய்து சண்டை போட்டு என் கணக்கை திரும்பபெற்றேன்.மூன்றாவது  முறை எங்களுடைய Terms&Condition னை பின்பற்றவில்லை எனவே உங்கள் கணக்கு மீண்டும் Activate செய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள்.

Rapidshare மற்ற தளங்களை போன்று பணம் எதுவும் கொடுப்பதில்லை. இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் உள்ளன ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் Rapidshare ரை உபயோகப்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். நல்லவேளை வேறுஒரு Rapidshare பிரிமியம் கணக்கு உள்ளதால் அதன் மூலம்Remote Upload செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றேன். இனிமேல் யாருக்கும் Rapidshare பிரிமியம் கணக்கை பரிசாக தர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறேன்.

அதே சமயம் அதற்கு பதிலாக Depositfiles.com மின் பிரிமியம் கணக்கை தர இருக்கின்றேன். Rapidshare ரில் பிரிமியம் கணக்கு வேண்டுமெனில் அவர்களிடம் பணம் கட்டிதான் பெறமுடியுமென்பதால் இந்த முடிவு.

Rapidshare பணம் தராத காரணத்தால் மற்ற தளங்கள் போட்டி போட்டுகொண்டு Offer கொடுகின்றார்கள்.காற்று உள்ளபோதே தூற்றிகொள்ளுங்கள்.முதலில்Fileserve பற்றி பார்ப்போம்.

1.Fileserve.com

Fileserve தளம் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற தளம்.இந்த மாதம் மட்டும் அதனுடைய வளர்ச்சி நான்கு மடங்காக உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புகின்ற மெயிலுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து News செக்சனில் வெளியிடுகின்றார்கள். எனக்கு Remote Upload வேகமாக இல்லை என்று அனுப்பியிருந்தேன் உடனே அவர்களுடைய செய்தி பிரிவில் Remote Upload சரிசெய்யப்பட்டுவிட்டது மேலும் வேகமாக RemoteUpload செய்ய வேலை நடந்த்துக் கொண்டிருக்கின்றது என்று வெளியிட்டுள்ளார்கள்.(இந்த பதிவு வெளியிட இருக்கும்போதே வேறு ஒரு தளம் இரண்டாவது Mirror Hosting காக அறிவித்துள்ளது மிக சந்தோசமாக இருக்கின்றது.)

2.Sharingmatrix.com


இந்த தளத்தை Mirror Hosting என்று  ஒரு சில முன்னணி தளங்கள் அறிவித்துள்ளன.எனவே இதனுடைய வளர்ச்சியும் மிக வேகமாகவே இருக்கும் என்று நம்புகின்றேன்.இந்த தளம் ஒரு MB முதல் தரவிறக்கத்திற்கு பணம் தருகின்றார்கள்.

Fileserve வில் இணைய

Sharingmatrix சில் இணைய

வரும் 13-07-2010 அன்று சிறிய பயணம் இருப்பதால் சந்தேகம் உள்ளவர்கள் google talk (globerah@gmail.com)மூலமாக  தொடர்புகொள்ளுங்கள்.ஒரு சிலருக்கு Remote மூலம் எப்படி Upload செய்வது என்பதை பற்றி கூறியுள்ளேன்.என்Refferal மூலமாக இணைந்து சம்பாதிக்க நினைப்பவர்கள் தொடர்புகொண்டால் அவர்களுக்கும் ஒரு சில கோப்புகளை Remote மூலம் Upload செய்து தருவேன். கடந்த இரண்டு வாரமாக என்னிடம் பிரிமியம் கணக்கு இல்லாததால் ஒரு சிலர் தொடர்புகொண்டும் என்னால் அவர்களுக்கு Remote Upload செய்து கொடுக்க முடியவில்லை.அவர்கள் அனைவரும் மீண்டும் தொடர்புகொள்ளவும்.Referal மூலமாக இணைந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை.

அருணாசலம் ஒரு மாத Depositfiles சின் பிரிமியம் கணக்கை பரிசாக பெற தகுதிபெற்றுள்ளார்.வரும் 13-07-2010 த்திற்குள் தொடர்புகொண்டால் பிரிமியம் கணக்கைபெற்றுக்கொள்ளலாம்.

இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் பாகம் 3

Thursday, July 8, 2010


இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்ய உதவும் இந்த மென்பொருள் (Mipony)அனைத்து வகையான File Hosting தளத்திலிருந்தும் தரவிறக்க உதவிபுரிகின்றது.

தரவிறக்க சுட்டி பதிவின்  இறுதியில்

Internet Download Manager ரில் தரவிறக்கம் ஆகாத Easy -Share , Uploading.com போன்ற தளங்களிலிருந்தும் தரவிறக்கம் இலகுவாக செய்ய முடியும்.

மிபோனியின் பயன்கள்.
    * 4Shared Downloader
    * Automated Downloader
    * DepositFiles Downloader
    * Download MiPony
    * Easy-Share Downloader
    * Free Hotfile Premium
    * Gigasize Downloader
    * Hotfile
    * Hotfile Download
    * Hotfile Downloader
    * HotFile Downloader
    * Hotfile Downloads
    * Hotfile Free
    * Hotfile Link Generator
    * Hotfile Links
    * Hotfile Premium
    * Hotfile Premium Account
    * Hotfile Premium Generator
    * Hotfile Premium Link
    * Hotfile.com
    * Mediafire Downloader
    * Mediafire Downloader
    * Megaupload Downloader
    * MiPony
    * MiPony Rapidshare
    * MiPony Review
    * NetLoad Downloader
    * Rapidshare.com Downloader
    * Update MiPony
    * ZShare Downloader

தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பை காப்பி செய்யும்போதே தானாகவே தன்னுள் Paste செய்துகொள்ளும்.தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பு தரவிறக்க் தகுதியுள்ளதா என்றும் தெரிந்துகொள்ளலாம்.

கோப்பு தரவிறக்க தகுதியானது என்பதை பச்சை கலர் டிக் மூலம் தெரிந்துகொள்ளலாம்.தகுதியில்லாத கோப்பு சிகப்பு நிற X மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 Rapidshare,Megaupload , Hotfile , Depositfiles , Uploading , Storage.to , Filefactory , Easy-Share , Netload.in போன்ற தளங்களில் பிரிமியம் கணக்கு இருந்தால் இந்த மென்பொருளில் உள்ளீடு செய்வதால் பிரிமியம் வேகத்தில் தரவிரக்கமாகும்.

மேலும் ஒரு தேடுபொறியை போன்றும் இது செயல்படுகின்றது.உங்களுக்கு தேவையான கோப்பை இந்த மென்பொருளில் உள்ள Browse and Download மூலமாக தேட வசதியளிக்கின்றது.

ஒரே நேரத்தில் பல File Hosting லிங்குகளை இதில் சேர்த்து தரவிறக்கம் செய்ய முடியும். Hotfile லில் மட்டும் சில சமயம் Verification Code கேட்கும்.மற்ற வகையில் தரவிறக்கம் செய்ய மிக அற்புதமான் மென்பொருள்.

இதில் முக்கிய சிறப்பம்சம் நான் கொடுத்திருக்கும் link Portable Version ஆகும்.இந்த மென்பொருளை கணினியில் Instal செய்ய அவசியமில்லை.

தரவிறக்க சுட்டி

யூ டூப் (Youtube) பில் அப்லோட் செய்வது எப்படி.

Wednesday, July 7, 2010

நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள உங்களிடம் நிறைய வீடியோ இருக்கும்.இந்த வீடியோக்களை Youtube பில் அப்லோட் செய்தால் அவர்களுக்கு லிங்கோ அல்லது உங்கள் தளத்தில் பதிந்தோ வெளியிட வசதியாக இருக்கும்.

முதலில் உங்கள் google கணக்கை வைத்து உள் நுழைந்துகொல்லுங்கள்.Upload தை தேர்வு செய்து உங்களிடம் உள்ள வீடியோவை தரவேற்றலாம்.

அப்லோட் ஆனவுடன் அந்த விடியோவை உங்கள் வலைபக்கத்தில் சேர்க்க Embed  டை காப்பி செய்து உங்கள் போஸ்டில் Edit HTML லில் Paste செய்யவும்.


நான் அப்லோட் செய்த வீடியோ........



ஃபாலோவர் கெட்ஜட் இல்லாத தளத்தில் ஃபாலோவராக

Thursday, July 1, 2010

 ஃபாலோவர் கெட்ஜட் ஒருவருக்கொருவர் தொடர்பை அதிகரிக்க உதவும்.நாம் ஃபாலோவராக  சேர்ந்த தளத்தில் நண்பர் என்ன பதிவு போட்டுள்ளார் என்று google Reader மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

ஒரு  சில வலைப்பூவில் ஃபாலோவர் கெட்ஜட் இருக்காது ஆனால் அந்த வலைப்பூவின் பதிவுகள் நமக்கு பிடித்திருக்கும்.அவருடைய பதிவுகள் அனைத்தும் மிக சிறந்த பதிவாக இருக்கும்.அவருடைய அடுத்து வரும் பதிவுகளை தவறவிடாமல் இருக்க அவருடைய தளத்தில் சேர Follower ராக விருப்பம் ஆனால் அந்த தளத்தில்தான் ஃபாலோவர் கெட்ஜட் இல்லையே...

இல்லை என்றால் என்ன?

எப்படி அந்த தளத்தில் இணைவது என்று பார்ப்போம்.

 முதலில் ஃபாலோவர் கெட்ஜட் இல்லாத வலைப்பூவிற்கு செல்லுங்கள்.
Ex:  blogname.blogspot.com/


அடுத்தது  Ctrl+U தேர்வுசெய்யுங்கள்.ஒரு புதிய XHTM விண்டோ திறக்கும்.


அதில் Ctrl+F அழுத்தி "BlogID" யை தேடுங்கள்.அதன் பக்கத்தில் உள்ள சுமார் 19 இலக்க எண்கள் இருக்கும். எண்களை காப்பி செய்து கீழே கொடுத்துள்ள URL லில் உள்ள NUMBER என்ற இடத்தில் Paste செய்து அந்த URL லை தேடுபொறியின் Addresbar ரில் நிரப்பி Enter செய்யவும்.


http://www.blogger.com/follow-blog.g?blogID=NUMBER&blogTitle=WORD1+WORD2+WORD3+...

 இப்பொழுது அந்த தளத்தில் ஃபாலோவராக இணையமுடியும்.படத்தை பார்க்க.

வேண்டாத பின்னூட்டங்களை தடுக்க.

Friday, June 25, 2010

நாம் பல பதிவுகளை போட்டிருப்போம்.நமக்கு யார் கருத்துரையிட்டுள்ளார்கள் எப்பொழுது என்று தெரியவும் சில  வேண்டத்தகாத வார்த்தைகளை கொண்டிருக்கும் கருத்துரைகளை கட்டுப்படுத்தவும் இந்த முறையை பின்பற்றலாம்.

 Login மற்றும் Password கொடுத்து உள்நுளைந்தபின்னர் அமைப்புகளில் (Settings) உள்ள கருத்துரைகள்(Comments) என்பதை தேர்ந்தெடுக்கவும். சற்று கீழே கருத்துரை மதிப்பாய்வு(Comment moderation) என்பதில் எப்போதும்(Always) என்பதை தேர்வு செய்யுங்கள்.


உங்களுக்கு வரும் கருத்துரைகள் அனைத்தும் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும்.இதனால் நம் பதிவிற்கு வந்திருக்கும் கருத்துரைகளை பாகுபடுத்தி வெளியிடலாம்.


சில (Readymade)கருத்துரைகள் ''பகிர்வுக்கு நன்றி''   ''நல்ல தகவல்''  ''பயனுள்ள செய்தி'' இவ்வாறாக இருக்கும்.இவ்வாறு வரும் கருத்துக்கள் எந்த பதிவுக்கு வந்துள்ளது என்று குழப்பும்..

இந்த கருத்துரைகள் எந்த பதிவிற்கு வந்துள்ளது என்று அறிய உங்களுடைய மெயில் ID  யை படத்தில் உள்ளதுபோல் கொடுத்துவிட்டால் உங்கள் மெயிலுக்கே வந்துவிடும். எந்த பதிவுக்கு கருத்துரையிட்டுள்ளார்கள் என்று அறிய இலகுவாகஇருக்கும்.

உங்களுக்கு அதிக பின்னூட்டம் வருவதாக இருந்தால் ஒரு புதிய மெயில் ID   இதற்கென்று உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

அநேக பதிவர்கள் இந்த முறையை பின்பற்றியிருப்பார்கள்.தெரியாத , செய்யாத பதிவர்களுக்காக இந்த பதிவு.

இணையத்தில் பணம் பாகம் 8 ரேபிட்ஷேர் ஒரு மாத பிரிமியம் கணக்கை பரிசாக பெரும் நண்பர்கள்

Wednesday, June 23, 2010

 ரேபிட்ஷேர் ஒரு மாத பிரிமியம் கணக்கை பரிசாக பெரும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பரிசு பெரும் நண்பர்கள்.
1.Anabarasu

2.Vinoth

3.Hakeem

4.vetrivelan

உங்களில் யாருடைய பெயராவது விட்டு போயிருந்தால் தெரியப் படுத்துங்கள்.உங்களுடைய வருமானம் Depositfiles.com மில்  இரண்டு டாலருக்கு மேல் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

இதை எவ்வாறு உபயோகப் படுத்தவேண்டும் என்று தெரியாதவர்கள் googletalk மூலமாக தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு  5GB வரை தரமிறக்க அனுமதியுள்ளது.எனவே வீணாக்காமல் உபயோகபடுத்த உங்களுடைய Depositfiles, மற்றும் Hotfile கணக்குக்கு  Remote Upload செய்து மேலும் பணம் சம்பாதிக்க முயலுங்கள்.

இந்த வார Target. Depositfiles.com மில் இரண்டு டாலர் சம்பாதிப்பவர்களுக்கு ஒரு மாத பிரிமியம் கணக்கு தரவுள்ளேன்.. காலவரையறை 30-06-2010 வரை.

கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருட்கள்

Tuesday, June 22, 2010

கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருட்கள்.இவைகள் நம் கணினிக்குள் இருந்தால் பாதுகாப்பாவகவும் உபயோகமுள்ளதாகவும்  இருக்கும்.


நம் கணினியில் இருக்க வேண்டிய முக்கிய மென்பொருட்களில் முதன்மையானது Deep Freeze என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளை பற்றி ஏற்கனவே இரண்டு முறை பதிவிட்டுள்ளேன். பதிவை பார்க்க சுட்டி அல்லது சுட்டி..
இதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது இதைப்பற்றி மேலும் அறிய இங்கே.


இரண்டாவதாக ஆண்டி வைரஸ்.
அனைத்து கணினிகளிலும் பயன்படும் இலவச ஆன்டிவைரஸில் முதன்மை இடத்தை தக்கவைத்திருக்கும் Avast  Home Edition. தரவிறக்கி நிறுவிய பின்னர் Register செய்தால் Seriel Key நம் மெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள். Register செய்யாமல் விட்டால் ஒரு மாதம் மட்டுமே வேலை செய்யும். இவை முற்றிலும் இலவச மென்பொருளாகும். தானாகவே அப்டேட் செய்துகொள்வதால் நம் கணினியில் வைரஸை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
மேலும் அறிய இங்கே.


மூன்றாவதாக தரவிறக்கி.
அனைவராலும் விரும்பப்படும் தரவிறக்கி மென்பொருள் Internet Download Manager .இதை பற்றிய பழைய பதிவு சுட்டி.
இதை பற்றி மேலும் அறிய மற்றும் தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லவும்.


நான்காவதாக.
Ccleaner  இந்த மென்பொருளும் இலவச மென்பொருள்தான்.
இணையத்தில் உலாவும்போது சேரும்  Browsing History, தற்சமயம் தேவையில்லாத  Registry தகவல்கள் ஏற்கனவே Unistal  செய்த மென்பொருளின் சில File கள்  போன்றவற்றால் நம் கணினியின் வேகம் குறைய அதிக வாய்ப்பு இருக்கின்றது.இவைகளை க்ளீன் செய்ய உதவும். நாம்  அவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான காரியமாகும். அதற்கு உதவிசெய்யவே  Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணினியின் வேகத்தை அதிகபடுத்தும்.
மேலும் அறிய இங்கே.

பதிவில் கொடுக்கும் லிங்குகள் புதிய விண்டோவில் தோன்ற.

Wednesday, June 16, 2010


நம் பதிவில் நம் நண்பர்களின் வலைப்பதிவை பற்றி கூறி அவர்களுடைய லிங்குகளை கொடுப்போம். அல்லது தரவிறக்கம் செய்யும் லிங்குகள்,அல்லது நம் ஏற்கனவே பதிவிட்ட லிங்குகள் இப்படி ஏதாவது ஒரு சுட்டியை (Link) கொடுப்போம். அதன் மீது க்ளிக்கினால் நாம் கொடுத்த லிங்க் திறக்கும். இவ்வாறு திறக்கும்போது நம் பதிவிலேயே திறக்கும் மீண்டும் நம்முடைய பதிவிற்கு வரவேண்டுமெனில் Back Arrow அல்லது மீண்டும் URL கொடுத்து வரவேண்டும்.இதனால் நம் பதிவு திறக்க சில நொடிகள் எடுத்துக்கொள்ளும்.

நாம் கொடுக்கும் லிங்குகளை புதிய விண்டோவில் திறந்தால் நம் பதிவை விட்டு அவர்கள் செல்ல வாய்ப்பில்லை.இவ்வாறு புதிய விண்டோவில் லிங்குகள் திறக்க நீங்கள் கொடுக்கும் லின்குகளின் HTML இருக்க வேண்டும்.


<a href="http://tamilbazaar.blogspot.com/2010/06/make-money-online.html" target="_blank">இணையத்தில் பணம் பாகம் 7 Rapidshare Premium கணக்கு இலவசம்</a>

பச்சை கலரில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் கொடுக்கவேண்டிய link , சிகப்பு கலரில் உள்ள எழுத்துக்கள் லிங்கின் பெயர். இரண்டையும் மாற்றி பதிவேற்றினால் அந்த link புதிய விண்டோவில் திறக்கும்.

பயர் பாக்ஸ் (Firefox) போர்டபுல்

Tuesday, June 15, 2010


பிரவுசர்களில் முன்னணியில் இருப்பது பயர்பாக்ஸ் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்றும் பலர் Internet Explorer ரை அதிகமான நபர்கள் உபயோகிக்கின்றார்கள். எந்த ஒரு புதியதையும் உபயோகிக்க அனைவரும் தயங்கிய ஒன்றே.எதையும் நாம் முயற்சிக்காதவரை அவை நமக்குபுதியதே. Internet Explorer உபயோகப் படுத்தி பழகிவிட்டதால் Firefox சை உபயோகிக்க தயங்குகின்றார்கள்.firefox ன் வசதி அவர்களுக்கு தெரியாமலே போய்விடுகின்றது.


புதிதாக Firefox சை முயற்சிப்பவர்கள் Portable version னிலிருந்து ஆரம்பிக்கலாமே.பிடித்திருந்தால் தொடர்ந்து உபயோகிக்கலாம்.இதை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை. டெஸ்க்டாப் பில் ஒரு போல்டரை உருவாக்கி அதன் மூலமாகஉபயோகப்படுத்தலாம்.

தரவிறக்க சுட்டி

இரண்டு google talk கணக்கை ஒரே நேரத்தில் உபயோகிப்பது எப்படி?

Monday, June 14, 2010


நான் ஏற்கனவே ஒரு மெயில் ID யின் மூலமாக பல நண்பர்களை google talk மூலமாக தொடர்புகொள்வதுண்டு. மேலும் ஒரு புதிய மெயில் தேவை ஏற்பட்டுள்ளதால் மேலும் ஒரு மெயில் பதிவு செய்துள்ளேன்.புதிய மெயில் ID யை அதிகமாக உபயோகிப்பதுண்டு. புதிய நண்பர்களைதொடர்புகொள்ள ஒவ்வொருமுறையும் google talk கில் பழைய மெயில் ID விட்டு வெளியேறி புதிய மெயில் ID யில் உள்நுழைய வேண்டியதாகி இருந்தது.

இரண்டு மெயில் ID யும் ஒரே நேரத்தில் உபயோகிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று இணையத்தில் தேடும்போது கிடைத்ததுதான் google talk labs edition. ஒரு மெயில் ID யின் மூலம் google talk கில் பேசிக்கொண்டே google talk labs edition னில்chat செய்ய முடியும். சுட்டி


இரண்டுமே மெயில் ID யும் google talk கில் இருக்க (மேலே சொன்னவை ஒன்று google talk மற்றொன்று google talk labs edition )
1. Right-click on the desktop டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்யவும்.
2. Select New
3. Select Shortcut
4. Paste this into the text box: கீழே தோன்றும் வரியை பேஸ்ட் செய்யவும்.
"c:\program files\google\google talk\googletalk.exe" /nomutex
5. Click Next கொடுத்து வரும் கட்டத்தில் அடையாள பெயரை கொடுக்கவும். (ex:google talk 2 அல்லது urmail@gmail.com)

இப்பொழுது டெஸ்க்டாப்பில் நீங்கள் கொடுத்த பெயரில் google talk icon இருக்கும் அதை ரன் செய்தால் ஏற்கனவே உங்களுடைய google talk ரன் னில் இருந்தால்.அதில் உள்ள மெயில் ID யே இதிலும் தோன்றும். புதிய google talk கில் ஒரு முறை signout கொடுத்து வேறொரு மெயில் ID யின் மூலமாக உள்ளே நுழையவும்.

தரவிறக்கம் செய்பவர்களுக்கான ஆட் ஆன்

Friday, June 11, 2010


இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு முன்னர் செய்யவிருக்கும் லிங்குகள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க உதவும் இந்த Addon மிக பயனுள்ளதாக இருக்கும்..

ஏதாவதொரு மென்பொருளோ படமோ தரவிறக்கம் செய்யவிருப்போம்.அது ஒன்றிற்கும் மேற்பட்ட பாகமாக இருந்து முதல் பாகத்தை தரவிறக்கம் செய்தபின்னர் இரண்டாவது பாகத்தின் லிங்க் வேலை செய்யாமல் போனால் ஏற்கனவே தரவிறக்கம் செய்த முத்த பாகம் வீணாகிவிடும். நம் நேரமும் வீணாகிவிடும். தரவிறக்கம் செய்வதற்கு முன்னர் லிங்குகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்ப்பது நம் நேரத்தைமிச்சப்படுத்தும்.

இந்த Addon னை நிறுவிவிட்டால் தரவிறக்கத்திற்கு தகுந்த லிங்குகளை பச்சை Green நிறத்திலும் Dead link குகளை சிகப்பு Red நிறத்திலும் தோன்றும்.


இந்த Addon னை நிறுவ சிறந்தமுறை Firefox ல் உள்ள Tools --->Add ons தேர்வு செய்து greasemonkey என்று தேடுங்கள்.இன்ஸ்டால் செய்த பின்னர் firefox சை restart செய்யுங்கள்.அடுத்ததாக இந்த லிங்கிற்கு சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.

இந்த Add on னில் 23 filehosting தளத்தின் லிங்குகளை சரிபார்க்கின்றது.


இணையத்தில் பணம் பற்றிய சந்தேகம் உள்ளவர்கள் google talk மூலமாக தொடர்பு கொள்ளும்போது தயவுசெய்து மைக்குடன் தொடர்புகொள்ளவும்.

சிறந்த சேவை வழங்கிவரும் ஒரு சிலருக்கு Rapidshare ஒரு மாத பிரிமியம் கணக்கு தர எண்ணியுள்ளேன். நான் ஒரு சிலரை தேர்வு செய்துள்ளேன்.நீங்களும் அவர்களுடைய பெயரை நாமினேட் செய்யலாம் அவர்களுடைய சேவையை விளக்கவேண்டும். முடிவை நான் மட்டுமே தீர்மானிப்பேன்.


Waiting List டில் உள்ள நண்பர்கள் அருணாசலம்.கமல்,அன்பரசு, ஹகீம்,வினோத் போன்றவர்கள் தொடர்பு கொள்ளவும். புதிதாக இணையத்தில் பணம் சம்பாதிக்க இணைபவர்கள் என்னை தொடர்புகொண்டு இணைந்தால் என்னால் ஆனா உதவிகளை செய்யமுடியும். மறக்காமல் மைக்குடன் தொடர்புகொள்ளவும்.
தொடர்புகொள்ள - globerah@gmail.com

இணையத்தில் பணம் பாகம் 7 Rapidshare Premium கணக்கு இலவசம்.

Tuesday, June 8, 2010


ரேபிட்ஷேர் பிரிமியம் கணக்கை நான் இலவசமாக தருகின்றேன். முழுவதுமாக படியுங்கள் கடைசியில் இந்தவார பரிசுகள் பற்றிய அறிவிப்பு உள்ளது.

நான் தருவதற்கு முன்னர்....................
நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியில் ரேபிட்சேரில் பிரிமியம் கணக்கு பெறுவதை பற்றி முதலில் பார்ப்போம்.

Rapidshare.com மில் உங்களுக்கு ஒரு Collector Account இருக்க வேண்டும்.
Free Rapid Point 5000 சேர்த்திருக்க வேண்டும்.
Premium Point 5000 சேர்த்திருக்க வேண்டும். நான் முதன் முதலாக சேர்க்க மூன்று மாத காலமாகியது. இப்பொழுது வாரத்திருக்கு இரண்டு Premium கணக்கு பெற முடிகின்றது.

ரேபிட்சேரில் நீங்கள் பிரிமியம் கணக்கை அடைய வேண்டுமெனில் மேலே சொன்ன மூன்று விசயங்களை முழுமை அடைந்திருந்தால் மட்டுமே அந்த தளம் உங்களுக்கு பிரிமியம் கணக்கை தரும்.

நான் ஒரு மாத Rapidshare Premium கணக்கை ஒரு சிலருக்கு பரிசாக கொடுக்க எண்ணியுள்ளேன். அதற்க்கு நீங்கள் கீழே சொன்னவைகளை பின்பற்றவேண்டும்.

Hotfile.com மில் என்னுடைய Referal மூலமாக இணைத்திருக்க வேண்டும்.
Depositfiles.com மில் என்னுடைய Referal மூலமாக இணைந்திருக்க வேண்டும்.
Fileserve.com மில் என்னுடைய Referal மூலமாக இணைந்திருக்க வேண்டும்.

நீங்கள் Hotfile லில் 10 டாலர் Depositfile லில் 5 டாலர் Fileserve வில் 5 டாலர் சம்பாதித்திருக்க வேண்டும்.
அல்லது
Depositfile.com மில் மட்டும் 10 டாலர் சம்பாதித்திருக்க வேண்டும். Depositfile.com அந்த தளமே முதலில் 5 டாலர் இலவசமாக கொடுத்துவிடுகிறார்கள்.எனவே அந்த 5 டாலர் கணக்கில் சேராது.

என்னிடம் 40 பதுக்கும் அதிகமான Rapidshare Premium கணக்கு உள்ளது. இதுவரை என் Referal மூலமாக இணைந்த 60 பதுக்கும் அதிகமான நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய கணக்கை சரிவர பயன் படுத்துகின்றார்கள். அனைவரும் பயன் படுத்தினால் அனைவருக்கும் என்னால் Premium கணக்கை கொடுக்க முடியும்.

புதியதாக இணைந்தவர்கள் இணைய இருப்பவர்கள் அல்லது ஏற்கனவே இணைந்தவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுடைய சந்தேகம் எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு சில நண்பர்கள் வேகமாக செய்கின்றார்கள். அவர்களுக்காக Depositfiles.com மில் 25 டாலரும் Hotfile.com மில் 50 டாலரும் சேர்த்திருந்தால் ஒரு வருட ரேபிட்ஷேர் பிரிமியம் கணக்கு தர தயார்.

எவ்வாறு சம்பாதிப்பது?
முதலில் என்னுடைய Referal மூலமாக இணையுங்கள்.
உங்களுடைய கோப்புகளை Upload செய்யுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் Google Talk மூலமாக என்னை தொடர்புகொள்ளுங்கள்.
Folderland.com மில் உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கி வெளியிடுங்கள்.
(Folderland.com மில் சிறப்பாக வெளியிடும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு வேறு சில தளங்களை அறிமுகம் செய்கின்றேன்.)

உங்கள் தளத்திற்கு வருபவர்கள் உங்களுடைய பதிவு பிடித்திருந்தால் கண்டிப்பாக தரவிறக்கம் செய்வார்கள். மற்ற Filehosting கை விட Depositfiles .com மில் அதிக பணம் தருகின்றார்கள். முடிந்தவரை Depositfiles.com மையே உபயோகப்படுத்துங்கள்.

Depositfiles.com பற்றிய பழைய பதிவு

Depositfiles.com இணைய
Hotfile.com இணைய
Uploading.com இணைய
Fileserve.com இணைய
Folederland.com இணைய

பிரிமியம் கணக்கை நீங்கள் பெறுவதால் உங்களுக்கு என்ன பயன்.
வேறு தளத்தில் உள்ள கோப்புகளை உங்கள் கணக்கான Depositfiles , Hotfile , Fileserve போன்ற தளங்களுக்கு Remote மூலமாக Upload செய்ய முடியும். அதாவது 100 MB உள்ள ஒரு கோப்பை வேறு தளத்திலிருந்து உங்கள் தளத்துக்கு Upload செய்யவேண்டுமெனில் முதலில் அந்த கோப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் இணையத்தின் வேகம் 256 Kbps ஆக இருந்தால் ஒரு மணிநேரமும் 512 Kbps ஆக இருந்தால் 30 நிமிடமும் ஆகும். தரவிறக்கம் செய்த பின்னர் உங்களுடைய கணக்கில் Upload செய்ய குறைந்தது நாற்பது நிமிடம் முதல் 90 நிமிடம் வரை ஆகும் . தரவிறக்கம் செய்ய ஒரு மணிநேரம் Upload செய்ய ஒரு மணிநேரம் ஆக மொத்தம் இரண்டு மணிநேரம் ஆகின்றது. Remote Uploade மூலமாக Upload செய்ய இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே.

Premium கணக்கை தருவதால் எனக்கு என்ன பயன்?
நீங்கள் என்னுடைய ரெபரல் மூலமாக இணைவதால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு 15% முதல் 25% வரை கமிஷன் கிடைக்கும்.உங்களுடைய பணம் எதுவும் குறையாது.இந்த கமிஷனை அந்த தளமே எனக்கு தருகிறார்கள்.

ஜூன் 15 ந்திற்குள் நீங்கள் Depositfiles .com மில் வெறும் இரண்டு டாலர் சம்பாதித்திருந்தால் ஒரு மாத பிரிமியம் கணக்கு தருகின்றேன்.(இலவசம் 5 டாலர் நீங்கள் சம்பாரித்தவை இரண்டு டாலர் ஆக மொத்தம் ஏழு டாலர் உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.)

இதுவரை Depositfiles.com மில் இரண்டு டாலர் சம்பாதித்தவர்கள் உடனே தொடர்புகொள்ளுங்கள்.

முதல் பிரிமியம் கணக்கை என்னுடைய நண்பர் திரு சூர்யாகண்ணன்(சிறந்த தொழில்நுட்ப பதிவாளர்) அவர்களுக்கு பரிசாக கொடுத்தேன்.

இந்தவாரம் ஒரு மாத Rapidshare Premium கணக்கை பரிசாக பெரும் நண்பர்கள்.
திரு தாமஸ் ரூபன்
திரு Mailforgain

Google Talk மூலமாக தொடர்பு கொள்ள புதிய முகவரி globerah@gmail.com
Related Posts with Thumbnails