கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க

Friday, August 28, 2009

உங்களுக்கு ஒரு அதிசயமான விஷயம்.கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க முடியும்.இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை இப்போது பார்க்கலாம். போட்டோ எடுக்கும் முன்னர் உங்கள் முகத்தை கம்ப்யூட்டர் மானிட்டர் பார்த்தவன்னமாக வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்தது முக்கியமான ஒன்று மறக்காமல் சிரித்தவாறே கீழே உள்ள கேமரா பட்டனை அமுத்துங்கள். அழுத்திய ஒரு சில வினாடிகளில் உங்கள் போட்டோவை ஸ்க்ரீனில்பார்க்கலாம்.


சரி ரெடியா அழுத்துங்க கேமராவை

பார்த்துட்டு ஒட்டு போட மறக்காதீங்க.


பங்கு சந்தை காளையா கரடியா?

Wednesday, August 26, 2009

இல்லை அது ஒட்டகம்.
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் திங்களன்று ஏறும் வார இறுதி வெள்ளியன்று இறங்கும் என்கின்றன நிலைமை ஒரு கட்டை விரல் விதி (Thump rule) போலிருந்தது.இப்போது நிச்சயமாக அப்படி இல்லை,என்று வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நிகழலாம்!
இன்றைய சந்தை உலகில் வர்த்தகம் நடைபெறுவது காளை போலவும் இல்லை கரடி போலவும் இல்லை,ஒட்டகம் போல, குதித்து குதித்து போகும் சவாரியை போல் ஒத்திருக்கிறது, ஒட்டகத்தின் கால்கள் வலுவாக இருக்கின்ற பட்சத்தில் நீண்ட பயணத்தைப் பற்றி கவலைப் பட தேவை இல்லை.
சரியான நேரத்தில் சரியான பங்கை தேர்ந்தெடுங்கள், பொறுமையை கடைபிடியுங்கள்.
உங்களுக்காக பொறுமையின் மகத்துவத்தை அறிய ஒரு உதாரணம்...!
ஷேர்களில் உதாரணம் என்றாலே இன்றைக்கு எவருக்கும் சொல்லத் தோன்றுவது இன்போசிஸ்தான் ,நம்மைப் போன்று சிருமுதலீட்டாளர்களையும் மதித்து, அனைவரையும் பலன் அடையச் செய்யும் நிறுவனம்!
1981 ல் ஒரு தனியார் நிறுவனமாகச் சிலரால் சேர்ந்து தொடங்கப் பெற்ற இன்போசிஸ் ,1993 ல் தான் முதல் IPO(Initial Public Offen) வெளியிட்டார்கள். அதுசமயம் அவர்களுடைய 10 ரூபாய் பங்குகளை 85 ரூபாய் கூடுதல் விலை வைத்து வெளியிட்டார்கள். விண்ணப்பம் போட்டவர்களுக்கெல்லாம் கிடைத்தது.இது வைரக்கல் என்று தெரியாத நேரம்.நம்மைப் போல் ஒருவர் 100 ஷேர் விண்ணப்பித்து பெற்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய முதலீட்டு 100*95=9500ரூபாய்.
அந்த நிறுவனம் இன்றைய தேதி வரை ஏராளமான டிவிடெண்டுகள் போனஸ் ஷேர்கள் கொடுத்திருக்கிறது. இதில் போனஸ் ஷேர்களின் கக்கை மட்டும் பார்த்தால் ......
மேலே கூறியது போல் ஒருவர் ரூபாய் 9500 க்கு 100 ஷேர் வாங்கி முதலீடு செய்திருந்தால் கணக்கை சரியாக கவனியுங்கள்.
1994 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள்,100 ஷேர் 200 ஷேர் ஆகியிருக்கும்.
1997 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள், 200 ஷேர் 400 ஷேர் ஆகியிருக்கும்.
1999 ல் ஒரு பங்குக்கு ஒரு பாங்கு போனஸ் கொடுத்தார்கள், 400 ஷேர் 800 ஆகியிருக்கும்,
2000 ம வருடம் முகப்பு விலை 10 ஆக இருந்ததை 5 ந்தாக பிரித்தார்கள் (share spolit) அதனால் 800 பத்து ரூபாய் பங்குகள் 1600 பங்குகள் 5 ரூபாய் பங்குகளாக மாறியிருக்கும்.
2004 ல் ஒரு பங்குக்கு மூன்று இலவசப் பங்குகள் கொடுத்தார்கள். இதன்படி பாங்கு எண்ணிக்கை 1600 லிருந்து 6400 ராக ஆகியிருக்கும்.
2006 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள். மொத்த பங்குகள் 6400 இரு மடங்காகி 12800 பங்குகள் இருக்கின்றது.
போட்ட முதலீடு 9500 ரூபாய், 2007 ல் ஒரு இன்போசிஸ் பங்கு ரூபாய் 2250 க்கு வர்த்தகமாகிக்கொண்டிருந்தது, மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு என்ன தெரியுமா கணக்கு போடலாமா? 2,88,00,000.00 ரூபாய்.சத்தியமாக எழுத்துப் பிழை இல்லைங்க,இரண்டு கோடியே என்பதி எட்டு லட்ச ரூபாயே தான்.
இதிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் பொறுமையின் மதிப்பு எவ்வளவு பயனுள்ளது என்று. சரி இப்பொழுது வர்த்தகம் நடைபெறும் பங்குகளில் வைரக்கல் பங்கு எது என்று தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் தெரியாவிட்டால் கொஞ்சம் பொறுத்திருங்கள் வேறு பதிவில் பார்ப்போம்.


பங்கு சந்தையில் வணிகம் செய்ய உதவும் பதிவுகள்.
முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை
பங்குசந்தை வெற்றிப் பயணம் - இன்ட்ரெஸ்டிங்கான இரண்டாவது பாதை.
பங்குச்சந்தை வெற்றிப் பயணம்! முகமறியாதவர்களின் மூன்றாவது பாதை!டாடா என்ற ஆலமரம்

Monday, August 24, 2009


மேட்டருக்கு போவதற்கு முன் ஒரு கேள்வி?
சவுரவ் கங்குலி,ரவிசாஸ்திரி,அஜித் அகார்கர் இவர்களுக்குள் கிரிக்கெட் தண்டி ஓர் ஒற்றுமை உண்டு,அது என்ன?

"என்ன டாடா கம்பெனி இங்கிலாந்தின் தரத்துக்கு இரும்புத் தண்டவாளங்களைத் தயாரிக்கப் போகிறதா? சாத்தியமே இல்லை!அப்படி அவர்கள் தயாரித்தால் அதன் ஒவ்வொரு அவுன்சையும் நான் விழுங்கத் தயார்"
சொன்னவர் சர் ப்ரெட்ரிக் அப்காட்.இந்திய ரயில்வேயின் சீப் கமிஷ்னர்.காலம் முதல் உலகப் போர் துவங்கும் சமயம்.
1912 ல் டாடா கம்பெனி 1,500 மைல் இரும்புத்தண்டவாளங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.அதே வேளையில் அப்போதைய சேர்மன் டோரப் டாடா குறிப்பிட்டது நல்லவேளை அப்காட் தன் வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இல்லாவிட்டால் எவ்வளவு அஜீரணம் ஏற்பட்டிருக்கும்.
டாடா என்ற ஆலமரத்தின் இரண்டு நூற்றாண்டு வணிகத்தின் ஜாம்ஷெட்ஜி டாடா என்ற வைராக்கிய மனிதன் தான் நாயகன், செல்வா செழிப்பில் பிறந்தும் முதலில் டிரேடிங் ,பிறகு டெக்ஸ்டைல்ஸ் மில் என வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலும் மனதளவில் ஒரு தேசியவாதியாக நவீன இந்தியாவை உருவாக்க அவர் கனவு கண்டார்,இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கியபோது கொடுக்கப்பட்ட முதல் பெரிய நன்கொடை இவருடையதுதான்.
விஞ்ஞானமும் தோழில் நுட்பமும்தான் இந்தியாவை முன்னேற்றும் என்று தீர்க்கமாக நம்பினார்.நம்மிடம் உள்ள வளத்தைக்கொண்டே நிலக்கரியையும் இரும்பையும் உற்பத்தி செய்ய வேண்டும் என் விரும்பினார்,நதி நீர் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டார்.
அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நனவாக்கியது டாடா குழுமம்.
முதல் இரும்பாலை, முதல் தொழில் நகரம்,முதல் உலகத்தர ஓட்டல்,முதல் விமான நிறுவனம்,முதல் சிமென்ட் பாக்டரி,முதல் தொழிநுட்ப பல்கலைக்கழகம், முதல் கனரக வாகனத் தயாரிப்பு, முதல் காப்பீடு நிறுவனம், முதல் பெரிய ஐ.டி. கம்பெனி, முதல் தேயிலை உற்பத்தி ...இந்த பட்டியல் முழுமையானதல்ல!
டாடா முதலில் கால் பதித்த துறைகள் ஐம்பதைத் தாண்டும்.2003 ன் கணக்கின்படி டாடா குழுமத்தின் மொத்த கம்பெனிகள் 96 ஆகும்.இவை தவிர மிகப் பெரிய சாதனை டாடா குழுமத்திற்கு உண்டு.தொழிலாளர் நலம் என்பது ஏட்டளவில்கூட இல்லாத காலத்தில் அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் பல வருடங்கள் கழித்து தொழிலாளர் சட்டங்கள் ஆயின.
ஒரு நாளைக்கு 8 மணி நேர பணி என்பது டாடா 1912 ல் அறிமுகப்படுத்தியது . அது கட்டாயமாக்கியது அரசு 1948 ல்.
1915 ல் இலவச மருத்துவ உதவியை டாடா அறிமுகப்படுத்தியது.அதை 1948 ல் அரசு கட்டாய சட்டமாக்கியது.
1917 ல் தொழிலாளர் நலம் என தனி துறை கண்டது.1948 ல் அரசு சட்டமாக அமலாக்கியது.
1920 ல் பிராவிடண்ட் ஃபண்ட் கொண்டு வந்தது.1952 ல் கட்டாய சட்டமாக்கியது.
1921 ல் .டி.. பயிற்சி/அப்ரென்டிஸ் பயிற்சி முதலில் கொண்டு வந்தது,1961 ல் அரசு சட்டம் கொண்டு வந்தது.
1934 ல் லாபத்தை பகிர்ந்து போனஸ் என்கின்ற திட்டம் கண்டது.1965 ல் அரசு சட்டமாக இயற்றியது.
1937 ல் பணி ஓய்வின்போது கிராஜுவிட்டி கொண்டு வந்தது.1972 ல் அரசு சட்டமாக இயற்றியது.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்......!
ஜெ.என்.டாடா முதல் ஆர்.என்.டாடா வரை பல தலைமுறை மாறுதல்கள் இருந்தாலும் எல்லோரையும் வழிநடத்திச் சென்றது அந்தக் குழுவின் ஆதார நம்பிக்கைகளும் கொள்கைகளும்தான் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
ஜெ.ஆர்..டி.டாடாவின் முன்னுரை மற்றும் ரத்தன் டாடாவின் பின்னுரை இரண்டும் டாடாவின் உள்மனச் சிந்தனைகளை அறிய வாய்ப்பளிக்கிறது.
ரத்தன் டாடா எம்.டி-யாக பொறுப்பேற்றபின் மும்பயிலிருந்து ஜாம்ஷெட்பூர் பறக்கிறார்.அந்த விமானப் பயணத்தின் போதுதான் தான் செய்ய வேண்டியது என்ன என்று பட்டியல் இட்டார்.எல்லா நிர்வாகத் தலைவர்களும் படிக்க வேண்டிய பாயிண்டுகள் அவை.
1,என் வாழ்க்கையில் என்ன சாதிக்கவேண்டும் என்பதில் தெளிவுவேண்டும்.
2,உண்மை நிலைமை எது என்று அறிய வேண்டும்.
3,மற்றவர்கள் அஞ்சுவதை செய்யத் துணிய வேண்டும்.
4,உயர் அதிகார வட்டத்தை மாற்றி அமைக்கத் தயங்கக்கூடாது.
5,எல்லோரும் சேர்ந்து கனவு கண்டு அதைச் சேர்ந்து சாதிக்கத் திட்டமிடவேண்டும்.
6,இரு வழித் தகவல் பரிமாற்றம் எப்போதும் கிடைக்க தளங்கள் அமைக்கவேண்டும்.
7,ஹெச்.ஆர். சீரமைக்கப் பட வேண்டும்.
8,நம்பகத் தன்மையை ஒருபோதும் இலக்கக் கூடாது.
9,டாடாவின் கொள்கைகளை என்றும் மீறக் கூடாது.
எல்லாம் சரி அது என்ன டாடா கொள்கை?
வரிகளைச் சரியாக கட்டவேண்டும் என்பது டாடாவின் பிடிவாதமான நம்பிக்கை.வரிஏய்ப்பு பற்றி நிதி ஆலோசகர் கூறுகிறார்,நாம் செய்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல,
ஜெ.ஆர்.டி. டாடா கேட்டார்:சட்டத்துக்கு புறம்பானதல்ல ஆனால் சரியா?
அதுதான் டாடா!!
இந்த நூலின் ஆசிரியர் ஆர்.எம்.லாலா டாடா குழுமத்துக்கு நெருங்கியவராக இருந்தும் துதிபாடும் நடையில் இல்லாமல்,ஆதாரத் தகவல்கள் மற்றும் அறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளதால் இந்தப் புத்தகம் ஒரு நிர்வாகச் சரித்திர நூலாகப் பரிமளிக்கிறது.
26 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முதல் பதிப்பு காலத்துக்குத் தக்கவாறு நேர்த்தியுடன் புதுப்பிக்கப் பட்டிருப்பதோடு இந்தி,குஜராத்தி,மற்றும் மராத்தி யிலும் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலயுள்ள கேள்விக்கு பதில் அனைவரும் டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பின் தேசத்துக்காக விளையாட வந்தவர்கள்.
இவை THE CREATION OF WEALTH என்ற டாடா பற்றிய புத்தக விமர்சனம்.

காதலுக்கு முன் நம்மில் யார் கோழைகள்.

Thursday, August 20, 2009

என்னுள்
எழுந்துவிட்ட வார்த்தைகள்
மட்டும்

பெட்டிப் பாம்பாய்
மனதில்
ஒழிந்துக் கொண்டு

சொல்லத் தெரியாத
என்
மனது

அதைப்
புரிந்துக் கொள்ளாத உன்
வயது

காதலுக்கு
முன்
நம்மில்
யார்
கோழைகள்.

தமிழிஷில் அதிக ஓட்டுக்கள் பெற

Tuesday, August 18, 2009


நான் சில வலைப்பூக்களை பார்த்தேன் அவர்களுடைய பதிவிற்கு அதிக பின்னூட்டம் கிடைத்திருந்தது.ஆனால் தமிழிஷில் ஒரு சில ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்திருந்தது.சிலருக்கு இரண்டு ஓட்டுக்களை தாண்டவில்லை.காரணம் என்னவென்றால் தங்கள் வலைப் பக்கத்தில் தமிழிஷின் ஓட்டளிப்பு பட்டையை நிறுவ தவறியதுதான் முக்கிய காரணமாக இருக்கும்.
உங்கள் வலைப்பதிவை ஏற்கனவே பார்த்த சில நண்பர்கள் உங்கள் வலைப்பூவில் உள்ள ஏதாவது ஒரு பகுதி பிடித்திருக்கலாம்.உங்கள் வலைப்பக்கத்தை Bookmarks பகுதியில் சேர்த்து இருப்பார்கள்.சில நாட்கள் கழித்து உங்கள் வலைப்பக்கத்தை Bookmarks வழியாக பார்க்க நேரிடும் போது நீங்கள் புதிய பதிவு போட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.அந்த புதிய பதிவை பார்ப்பவர்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைப்பதிவைப் பற்றி உங்களுக்கு பின்னூட்டம் கண்டிப்பாக கிடைக்கும் ஆனால் தமிழிஷின் ஓட்டை நீங்கள் பெற முடியாது.பிரபலமாகக் கூடிய வாய்ப்பை தவற விட நேரிடும்.
எனவே தயவு செய்து உங்கள் வலைப் பக்கத்தில் தமிழிஷின் ஓட்டளிப்பு பட்டையை நிறுவ தவறாதிர்கள்.
.பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும்.எனவே சமீபத்திய ஒரு மணி நேரத்திற்குள் ஓட்டளிப்பு பட்டை இல்லாத வலைப் பக்கங்கள்.
http://idhyamonline.blogspot.com/2009/08/blog-post_18.html
http://safrasvfm.blogspot.com/
http://yenthottam.blogspot.com/
http://mmabdulla.blogspot.com/2009/08/130809.html
http://niyazpaarvai.blogspot.com/2009/08/blog-post_18.html
http://dhejasvini.blogspot.com/2009/08/blog-post.html
http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_18.html


தமிழிஷின் ஓட்டளிப்பு பட்டை வேண்டுவோர் கீழே சுட்டியை அழுத்தவும்.
http://blog.tamilish.com/pakkam/5நீங்கள் கோடிஷ்வரனாக வேண்டுமா

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

கோயிலுக்கு முன் நின்று
கீழே உள்ள மந்திரத்தை
நாள் தவறாமல் சொல்லுங்கள்.
அய்யா தர்மம் பண்ணுங்க...

முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற

Sunday, August 16, 2009

உங்களின் முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற கீழே கொடுத்துள்ள code யை copy செய்து Layout --->Add a gadget---> ல் HTML/java script ஒன்றை உருவாக்கி அதில் paste செய்யவும்.
இதில் Destination page URL என்பதில் உங்களுடைய முக்கிய பதிவுகளின் URL இடவும். 1.your text goes here என்பதில் உங்களின் முக்கிய பதிவுகளின் தலைப்பை இடவும். சோதிக்க என்வலைப்பூவில் உள்ள என்னுடைய படைப்புக்கள் என்பதை பார்க்கவும்.
 

<center><FORM><SELECT name="URL"
onChange="if(options[selectedIndex].value)
window.location.href=
(options[selectedIndex].value)">
<OPTION value="">My other stuff</OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>1. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>2. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>3. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>4. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
</SELECT><NOSCRIPT><INPUT type=submit value="Go">
</NOSCRIPT></INPUT></FONT></FORM></center>

 

விளையாடலாம் வாங்க பாகம்-2

Saturday, August 15, 2009

அனைவருக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

ஏற்கனவே வெளியிட்டுள்ள விளையாடலாம் வாங்க பதிவிற்கு ஏற்பட்ட வரவேற்ப்பைப்பையும் ஆதரவையும் பார்த்து ரெம்ப அசந்து போய்விட்டேன்.விளையாடலாம் வாங்கக்கு கிடைத்த ஆதரவே இந்த விளையாடலாம் வாங்க பாகம்-2 டை எழுதத் தூண்டியது.
விளையாட்டப் பற்றி எழுதுவதற்கு முன் சில வார்த்தைகள்.
எனக்கு பெரியதாக ஊக்கமளித்த Maximum India அய்யா http://sandhainilavaram.blogspot.com/ அவர்களும் நண்பர் தமஸ் ரூபன் அவர்களும்தான்.அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சில நண்பர்கள் ஏற்கனவே வெளியான விளையாடலாம் வாங்க பதிவைப் பற்றி குறிப்பிடும் பொது அதில் அதிகமான படங்கள் இருப்பதாகவும்,Window திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் குறைப்பட்டுக் கொண்டார்கள்.
அவர்களுடைய குறையை போக்க இந்த பதிவில் படங்களை அதிகம் சேர்க்கவில்லை, அதிகமான படத்தைப் போடுவதற்கு காரணம் எனக்கு விளக்கமாக எளிதத் தெரியாது என்ற உண்மைதான். ஒருபக்கம் எழுதி புரியவைப்பதை விட ஒரு படத்தில் புரியவைப்பது எளிது என்பது என் தனிப்பட்ட கருத்து.
சரி விசயத்திற்கு வருவோம். விளையாடலாம் வாங்க பாகம்-2 லும் இரண்டு விளையாட்டு கொடுத்துள்ளேன்.

முதலில் கீழே கிளிக்கி தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும்
தரவிறக்கம் செய்தபின்னர் winrar ல் extract செய்துக்கொள்ளவும்.
1. Trijinx
முதலில் TriJinxAKristineKrossMystery_1660.exe என்ற exe file லை இரண்டுமுறை க்ளிக்கி run செய்யவும்.


மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.மறந்து விட்டால் trial version ஆக வாய்ப்பு உள்ளது.உடனே விளையாட வேண்டாம்.
TriJinx.exe என்ற கோப்பை copy செய்து
C:\Program Files\Alawar\TriJinx என்பதில் paste செய்யவும்.முழுமையான விளையாட்டு தயார்.இப்பொழுது விளையாடி மகிழுங்கள்.


2. BeJeweled 2 Deluxe


BeJeweled 2 Deluxe.exe என்ற exe கோப்பை இரண்டுமுறை க்ளிக் செய்து run செய்யவும்.இந்த விளையாட்டிற்கு extra வேலை எதுவும் இல்லை.முழுமையாகவே உள்ளது.

ஏதேனும் குறைபாடு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்ளப்படும்.இந்த விளையாட்டுக்கள் சம்பந்தப் பட்ட உங்கள் தேவையையும் கூறுங்கள் முடிந்தால்
உதவி செய்கின்றேன். மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.உங்கள் ஆதரவே என்னை மேலும் எழுதத் தூண்டும் நன்றி.

i phone water proof கவர்

Friday, August 14, 2009


Sanwa கம்பெனி 200-PDA016 என்ற பெயரில் iphon water proof கவரை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. i phone யை வெளியில் எவ்வாறு உபயோகித்தோமோ அதே போல் இந்த கவருடனும் உபயோகிக்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
இந்த கவரை போட்டிருந்தால் 30 நிமிடம் வரை தண்ணீரின் ஆழத்திலும் எந்த கெடுதலும் வராமல் தாக்கு பிடிக்கக் கூடியது.
இந்த கவர் iphone 3G மற்றும் 3Gs க்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டது.


விளையாடலாம் வாங்க

Tuesday, August 11, 2009

முதன் முதலாக விளையாடுபவர்களுக்கு கொஞ்சம் ரசனை இல்லாத விளையாட்டு போல் தோன்றும்.விளையாட விளையாட மிகப் பிடித்துவிடும்.இதில்
இரண்டு விளையாட்டு இருக்கின்றது.முதலில் கீழே தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
தரவிறக்கம்
தரவிறக்கம் செய்த பின்னர் winrar ல் extract செய்துக்கொள்வும்.
1.insaniquarium

Wininsaniquarium_setup.exe என்பதிம் மீது இரண்டு முறை க்ளிக்கி Run செய்யவும் கீழே தோன்றும் படத்தைப் போன்று ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.எடுக்காமல் விட்டால் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்.trial version ஆகிவிடும்.

CM_insaniQCRK_instal என்பதின் மீது இரண்டு முறை க்ளிக்கி Run செய்யவும்.
கீழே தோன்றும் படம் போல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும்


இப்பொழுது விளையாடி மகிழலாம்.

2.Feeding Frenzy


FeedingFrenzy2Install.exe என்பதின் மீது இரண்டு முறை க்ளிக்கி Run செய்யவும்
கீழே தோன்றும் படத்தைப் போன்று ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும்.

மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.

Feeding.Frenzy.2.v1.0-DELiGHT என்ற கோப்பில் உள்ளவைகளை copy செய்து (C:)program files>GameHouse>Feeding Frenzy 2 ல் paste செய்யவும்
desktop உள்ள Feeding Frenzy கேம் icon delete செய்யவும்.


C:)program files>GameHouse>Feeding Frenzy 2 ல் சென்று FeedingFrenzyTwo.exe என்பதின் மீது right click செய்து sned to desktop (shortcut) செய்யவும்.
இப்பொழுது விளையாடி மகிழலாம்.வைரஸின் தடுப்புச் சுவர்.

Saturday, August 8, 2009

உங்கள் கணினியில் வைரஸ் வராமலிருக்க உதவும் மென்பொருள் இந்த Deep Freeze

இதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,
நீங்கள் எதாவது கோப்புகள் தரவிறக்கம் செய்தாலோ அல்லது செமித்துவைத்தாலோ கணினியை restart செய்யும்போது இருக்காது,எனவே நீங்கள் செமிக்கவேண்டிய கோப்புகளை வேறொரு drive (Freeze இல்லாத drive) களில் சேமித்துக் கொள்ளவேண்டும்.
முதலில்கீழே க்ளிக்கி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

Mbaran.exe என்பதின்மீது double click செய்யவும் கீழே தோன்றும் படம் வரும்.
அதில்Deep Freeze 6.30 என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தேவையான டிரைவ்களை தேர்தெடுக்கவும்.


தேவையான கடவுச் சொல்லை கொடுத்து Apply and reboot செய்யவும்,


restart ஆனவுடன்
உங்கள் கணினியை freeze செய்ய icon மீது shift key யை அழுத்திக்கொண்டு இரண்டு முறை கிளிக்கவும்.


கடவுச் சொல்லை கொடுத்து Boot frozen தேர்ந்தடுக்கவும்.

(தப்பு) மார்க் இருந்தால் உங்கள் கணினி freeze ஆகவில்லை .


முக்கிய குறிப்பு :இதில் recycle pin ல் உள்ளவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
இந்த பதிவை பற்றி உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்,தவறு இருப்பின் திருத்திக் கொள்ளப்படும்.உங்கள் ஆதரவு மேலும் பல தகவல்களை பதிய உந்து சக்தியாக எனக்கு அமையும்.

ப்லாக் ஒரு நோயா

Thursday, August 6, 2009

நான் சமீபத்தில்தான் ப்லாக் எழுதுகின்றேன்.சில சமயம் வியாபாரத்தை விட்டு ப்லாகில் மூழ்கிவிடுகின்றேன்,நானாவது பரவாயில்லை என் நண்பர் ஒருவர் கடையை திறந்ததிலிருந்து கடை மூடும் வரை ப்லாக் ப்லாக் என்று இருக்கிறார்.அவரும் பங்கு வணிக வியாபாரம் செய்கின்றார்,கடந்த இரண்டு மாதகாலமாக பங்கு வணிகம் செய்வதில்லை. பார்த்தால் ப்லாகில் மூழ்கி இருக்கிறார்.
நான் சில சமயம் நினைப்பதுண்டு சிலர் தினமும் நிறைய பதிவுகள் போடுகின்றார்கள் அவர்களுக்கு வேற வேலை வெட்டி கிடையாத (நண்பர்கள் மன்னிக்கவும்)
நானும் சமீபத்தில் ஒரு பதிவு எழுதி thamilish ல் வெளியிட்டேன் அந்த பதிவு தட்டச்சு செய்வதற்குள் மிகவும் நோந்துபோய்விட்டேன்.இவர்களால் மட்டும் எப்படி இத்தனை பதிவுகளுக்கு தட்டச்சு செய்யமுடிகின்றது.

தவறுஇருந்தால் மன்னிக்கவும் உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

கோடிகளைக் குவிக்கும் கோல்ட்மேன் சாக்ஸ்

Tuesday, August 4, 2009


பொருளாதார
நெருக்கடி காரணமாக அமெரிக்கா பிஸினஸ் நிறுவனங்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு லாபம் சம்பாதித்து பெரும் "அதிர்ச்சி"யை ஏற்படுத்தியிருக்கிறது! கொஞ்சநஞ்சமல்ல. 11.4 பில்லியன் அமெரிக்கா டாலர் லாபம் சம்பாதித்திருக்கிறது!
இப்படி ஒரு லாபத்தை அந்த நிறுவனம் அதன் வாழ்நாளில் சம்பாதித்ததில்லை என்பது முக்கியமான விஷயம்!
கோல்ட்மேன் சாக்ஸின் இந்த அசாதரண வெற்றியை பார்த்து மாற்ற நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல, ஊழியர்களும் பொறாமையில் புழுங்கித் தவிக்கிறார்கள். காரணம் கொல்ட்மேனில் வேலை பார்க்கும் ஊழியர் ஒவ்வொருவருக்கும் சுமார் 7.70 லட்சம் அமெரிக்கா டாலர் போனஸாக கிடைக்கப் போகிறதாம்.
கோல்ட்மேன் நிறுவனம் தனது சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டிருக்க,மற்ற நிறுவனங்களோ இதன் பின்னணியில் பல தகிடுதத்தங்கள் நடந்திருப்பதாக சந்தேகம் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.

கவர்மென்ட் சாக்ஸ்!
கோல்ட்மேன் சாக்ஸ் வங்கிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் முன்பு சி..ஓவாக இருந்தார் ஹங்க் பால்சன். இவர் பிற்பாடு அமெரிக்க அரசாங்கத்தின் கருவூலச் செயலாளராக மாறினார். 2008 ஆகஸ்டில் லெமென் பிரதர்ஸ் வங்கி சிக்கலில் மாட்டியபோது ,இவர்தான் கருவூலச் செயலாளராக இருந்தார். லெமென் பிரதர்ஸ் வங்கி விழுந்த செய்தி வெளியான சில நாட்களுக்குள் "A.I.G. நிறுவனத்தை மீண்டும் உயிர்பிப்பதர்க்கான உதவியை அரசாங்கம் செய்யும் என்று அறிவித்தார் ஹங்க் பால்சன். அந்த நேரத்தில் அமெரிக்காவில் பல வங்கிகள் கடன் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்க A.I.G.க்கு மட்டும் அமெரிக்க அரசாங்கத்தின் உதவி எப்படி கிடைத்தது? காரணம் A.I.G. நிறுவனத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி பெரிய அளவில் முதலீடு செய்திருந்ததுதான் என்கிறார்கள்.

இன்சூரன்ஸில் குவிந்ததா!

கடந்த ஆண்டு வரை அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்தபோது விட்டாரா ஊர்பேர் தெரியாத நிறுவனங்களெல்லாம் வீடு கட்டி விற்க ஆரம்பித்தன,இப்படி விற்கப்பட்ட வீடுகளின் தரம் சரியில்லாமல் போனதால் அதை வாங்கியவர்கள் வீட்டைக்கட்டிக் கொடுத்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்க ஓடினார்கள்.ஆனால் வீட்டை விற்ற நிறுவனமோ, ஏற்க்கனவே காலி செய்திவிட்டு ஓடியிருந்தது.
இந்த நிலையில் வீட்டை வாங்கியவர் என்ன செய்வார்?கொஞ்சம் நஷ்டப்பட்டவது இன்னொருவர் தலையில் கட்டப் பார்ப்பார். அதுவும் நடக்கவில்லை என்றால் வீட்டுக்கான கடனைக் கட்டாமல் வீட்டை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவார்.இப்படி விட்டுப் போன வீடுகள் நாளுக்கு நாள் பெருக்கிகொண்டிருக்க இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் முழித்தன மற்ற நிறுவனங்கள்.
ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் புதிதாகக் கட்டிய வீட்டில் கட்டுமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்தால், அதிலிருந்த தப்பிக்க இன்சூரன்ஸ் செய்துகொண்டது. இதற்கான பிரிமியத்தை வீட்டுக்கடன் பெற்றவரிடமிருந்தே வசூல் செய்தது.பிரச்சனை என்று தன்னை யாரும் தேடி வந்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி அதற்கான நஷ்ட ஈட்டைப் பெற்று அதில் கொஞ்சம் பணத்தை வீட்டு வாங்கியவரிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை அப்படியே அமுக்கிவிட்டது என்று புகார் எழுப்புகிறார்கள். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இப்படிச் சேர்த்த பணம் பல லட்சம் டாலர் இருக்குமாம்.
இப்படிச் செய்வது தவறில்லையா என்று கேட்கலாம்.கோல்ட்மேன் சாக்சைப் பொறுத்தவரை இதெல்லாம் பிஸினஸ் சகஜம்தான் என்கிறார்கள்.கை நிறைய போனஸ் என்கிற அறிவிப்பால் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இன்று பரபரப்பான விளம்பரம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த பகட்டான விளம்பரமே நாளை அந்த நிறுவனத்துக்கு எதிராகவும் போகலாம்.வியாபாரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நன்றி :விகடன்
Related Posts with Thumbnails