ப்லாக் ஒரு நோயா

Thursday, August 6, 2009

நான் சமீபத்தில்தான் ப்லாக் எழுதுகின்றேன்.சில சமயம் வியாபாரத்தை விட்டு ப்லாகில் மூழ்கிவிடுகின்றேன்,நானாவது பரவாயில்லை என் நண்பர் ஒருவர் கடையை திறந்ததிலிருந்து கடை மூடும் வரை ப்லாக் ப்லாக் என்று இருக்கிறார்.அவரும் பங்கு வணிக வியாபாரம் செய்கின்றார்,கடந்த இரண்டு மாதகாலமாக பங்கு வணிகம் செய்வதில்லை. பார்த்தால் ப்லாகில் மூழ்கி இருக்கிறார்.
நான் சில சமயம் நினைப்பதுண்டு சிலர் தினமும் நிறைய பதிவுகள் போடுகின்றார்கள் அவர்களுக்கு வேற வேலை வெட்டி கிடையாத (நண்பர்கள் மன்னிக்கவும்)
நானும் சமீபத்தில் ஒரு பதிவு எழுதி thamilish ல் வெளியிட்டேன் அந்த பதிவு தட்டச்சு செய்வதற்குள் மிகவும் நோந்துபோய்விட்டேன்.இவர்களால் மட்டும் எப்படி இத்தனை பதிவுகளுக்கு தட்டச்சு செய்யமுடிகின்றது.

தவறுஇருந்தால் மன்னிக்கவும் உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

Comments

6 Responses to “ப்லாக் ஒரு நோயா”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

//என் நண்பர் ஒருவர் கடையை திறந்ததிலிருந்து கடை மூடும் வரை ப்லாக் ப்லாக் என்று இருக்கிறார்.//

அவர்க்கு என்னுடய ஆழ்ந்த அனுதாபங்கள்.

//பதிவு தட்டச்சு செய்வதற்குள் மிகவும் நோந்துபோய்விட்டேன்.இவர்களால் மட்டும் எப்படி இத்தனை பதிவுகளுக்கு தட்டச்சு செய்யமுடிகின்றது.//

அது ஒன்றும் பெரிய விசியமேயில்லை.
கமூகொ அடித்தால் சுலபம். எழுத்தழார் சுஜாதா அவர்கள் உடல் நிலை சரியாக இருந்தவரை தினமும் அவரே டைப் அடித்து பத்திரைக்களுக்கு அனுப்புவார்.

//சிலர் தினமும் நிறைய பதிவுகள் போடுகின்றார்கள் அவர்களுக்கு வேற வேலை வெட்டி கிடையாத//

சிலப்பேருக்கு அதுவும் ஒரு வேலை(சேவை!!!) தான்.

August 6, 2009 at 2:14 PM

வாருங்கள் //Thomas Ruban said... //
உங்கள் வருகைக்கு நன்றி

நான் யாரைப்பற்றி பதிவிட்டேன் என்று உங்களுக்கும் தெரியாதமாதிரி பின்னூட்டம் இடுகின்றீர்கள்,உங்களைப்போன்ற பின்னூட்டப்புலிகள் என் பதிவிற்கும் பின்னூட்டம் இட்டது உற்சாகம் அளிக்கிறது.தகவல் (சந்தைநிலவரம்)
//என் நண்பர் ஒருவர் கடையை திறந்ததிலிருந்து கடை மூடும் வரை ப்லாக் ப்லாக் என்று இருக்கிறார்.//

அவர்க்கு என்னுடய ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவருக்காக நானும் என் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

//அது ஒன்றும் பெரிய விசியமேயில்லை.
கமூகொ அடித்தால் சுலபம். எழுத்தழார் சுஜாதா அவர்கள் உடல் நிலை சரியாக இருந்தவரை தினமும் அவரே டைப் அடித்து பத்திரைக்களுக்கு அனுப்புவார்//

சுஜாதா சாரை எல்லாம் நம்முடைய list ல் சேர்க்கக்கூடாது.

//சிலப்பேருக்கு அதுவும் ஒரு வேலை(சேவை!!!) தான்.//
மிகச்சரியாக சொன்னீர்கள்.

August 6, 2009 at 2:32 PM
Maximum India said...

அன்புள்ள ரஹ்மான்!

ஒரு நண்பனாக சில கருத்துக்கள்.

(என்னைப் போன்ற) ஒரு சிலருக்கு ஆர்வக் கோளாறு கொஞ்சம் அதிகம். எந்த ஒரு புதிய துறையிலும் இறங்கி விட்டால் கொஞ்ச நாட்கள் மனது வேறு எதிலும் ஓடாது. கொஞ்ச நாள் சென்ற பின்னர் ஒன்று பழகி விடும் அல்லது வேறு ஏதாவது புதிய ஆர்வம் வந்து விடும்.

பதிவுலகம் என்பது ஒரு வித பகிர்தல் அல்லது அறிவுத் தேடல் மட்டுமே, வாழ்க்கை அல்ல என்பதையும் மனதில் வைத்திருங்கள். சொந்த வேலையில் இடைஞ்சல் வருமளவுக்கு பதிவுலகில் ஈடுபட வேண்டாம்.

மற்றபடிக்கு தட்டச்செல்லாம் கொஞ்சம் பழகி விட்டால் எளிதாக வந்து விடும்.

எனவே கவலைப் படாதீர்கள்! விரும்பும் வரை பதிவுலகில் உற்சாகமாக தொடருங்கள்.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

August 6, 2009 at 7:15 PM

வாங்க சார் உங்கள் வருகைக்கு நன்றி
//Maximum India said...//

//(என்னைப் போன்ற) ஒரு சிலருக்கு ஆர்வக் கோளாறு கொஞ்சம் அதிகம். எந்த ஒரு புதிய துறையிலும் இறங்கி விட்டால் கொஞ்ச நாட்கள் மனது வேறு எதிலும் ஓடாது. கொஞ்ச நாள் சென்ற பின்னர் ஒன்று பழகி விடும் அல்லது வேறு ஏதாவது புதிய ஆர்வம் வந்து விடும்.//

எவ்வளவு அற்புதமான வரிகள் மிக எளிதாக சொல்லியிருக்கிறீர்கள். என்னைப்போன்றவர்களுக்கு மிகப்பயனுள்ள தங்க வரிகள்.

//பதிவுலகம் என்பது ஒரு வித பகிர்தல் அல்லது அறிவுத் தேடல் மட்டுமே, வாழ்க்கை அல்ல என்பதையும் மனதில் வைத்திருங்கள். //

மிகச்சரியாக சொன்னீர்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.உங்களைப்போன்றவர்களுடைய ஆதரவு என்னைப்போன்றவர்களுக்கு மிக அவசியம்.மீண்டும் ஒரு முறை நன்றி சார்.

August 6, 2009 at 9:08 PM
Thomas Ruban said...

//உங்களைப்போன்ற பின்னூட்டப்புலிகள் என் பதிவிற்கும் பின்னூட்டம் இட்டது உற்சாகம் அளிக்கிறது.//

உங்களைப்போன்ற பின்னூட்டப்புலிகள் எப்போதுயிருத்து? நான் இந்த விளையாட்டிற்கு
வரலை. பின்னூட்டப்புலி என்றால் வால்பையன் என்றால் பின்னூட்டப்புலி நன்னேல்லாம்
ஒரு தூசி.பின்னூட்டஎலி என்று வேண்டுமானால் கூறலாம்.

மோதிரகையால் குட்டுபட்ட மாதிரி இருக்கு!!

August 6, 2009 at 10:08 PM

உங்கள் கேள்விக்கு நிறைய பதில்கள் இருக்கிறது!

நான் டைப் ஹையர், அதனால், சில நிமிடங்களில் ஒரு பதிவை அடித்து விடுவேன்.

அதோடு, நான் சமைக்கும் நேரம் தான், என் கற்பனை குதிரை பறக்கும் நேரம்.

யோசித்து எழுதுபவர்கள் சில பேர்! யோசிக்காமல் வேக வேகமாக எழுதுபவர்கள் சில பேர்! நான் இரண்டாம் ரகம்!

சிலருக்கு ஒரு கதையோ கவிதையோ எழுத மணிக்கணக்கு, அல்லது நாள் கணக்கு! சிலருக்கு நிமிட கணக்கு! அவர்கள் அதிகம் பதிவிடுகிறார்கள்.

ஆனால், என்ன பதிவிடுவது என்ற பஞ்சம் மட்டும் எனக்கு வந்ததே இல்லை. எதை முதலில் பதிவிடுவது என்ற திண்டாட்டம் வேண்டுமானால் வந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு ஒரு பதிவுக்கு மேல் போட்டால், பலருடைய பார்வைக்கு வராமலே போய் விடும் வாய்ப்பு உள்ளது. அதனால், ஒன்று மட்டுமே போட வேண்டும் என்ற என் சங்கல்பம் சில சமயம் காற்றோடு போய் விடுகிறது.

மொத்தத்தில் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு பதிவது என்பது ஜுஜுபி மேட்டர். படங்கள் இணைக்கும் போது மட்டும் கொஞ்சம் லேட்டாகும்!

முன்பே சொன்ன மாதிரி, நானெல்லாம் கீபோர்டை பார்க்கவே மட்டேன், டைப் செய்யும் போது!

இந்த கமெண்ட்டையே ஒரு பதிவளவுக்கு போடும் போதே, உங்களுக்கு தெரிந்திருக்கும்!

ஆனா, பதிவுக்கு பதில் அல்லது ஓட்டு விழுகிறதா என்று அவ்வப்போது, வந்து பார்க்கிறோமே, அது ஒரு நோய் என்று தான் தோன்றுகிறது!

August 20, 2009 at 10:55 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails