கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருட்கள்

Tuesday, June 22, 2010

கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருட்கள்.இவைகள் நம் கணினிக்குள் இருந்தால் பாதுகாப்பாவகவும் உபயோகமுள்ளதாகவும்  இருக்கும்.


நம் கணினியில் இருக்க வேண்டிய முக்கிய மென்பொருட்களில் முதன்மையானது Deep Freeze என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளை பற்றி ஏற்கனவே இரண்டு முறை பதிவிட்டுள்ளேன். பதிவை பார்க்க சுட்டி அல்லது சுட்டி..
இதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது இதைப்பற்றி மேலும் அறிய இங்கே.


இரண்டாவதாக ஆண்டி வைரஸ்.
அனைத்து கணினிகளிலும் பயன்படும் இலவச ஆன்டிவைரஸில் முதன்மை இடத்தை தக்கவைத்திருக்கும் Avast  Home Edition. தரவிறக்கி நிறுவிய பின்னர் Register செய்தால் Seriel Key நம் மெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள். Register செய்யாமல் விட்டால் ஒரு மாதம் மட்டுமே வேலை செய்யும். இவை முற்றிலும் இலவச மென்பொருளாகும். தானாகவே அப்டேட் செய்துகொள்வதால் நம் கணினியில் வைரஸை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
மேலும் அறிய இங்கே.


மூன்றாவதாக தரவிறக்கி.
அனைவராலும் விரும்பப்படும் தரவிறக்கி மென்பொருள் Internet Download Manager .இதை பற்றிய பழைய பதிவு சுட்டி.
இதை பற்றி மேலும் அறிய மற்றும் தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லவும்.


நான்காவதாக.
Ccleaner  இந்த மென்பொருளும் இலவச மென்பொருள்தான்.
இணையத்தில் உலாவும்போது சேரும்  Browsing History, தற்சமயம் தேவையில்லாத  Registry தகவல்கள் ஏற்கனவே Unistal  செய்த மென்பொருளின் சில File கள்  போன்றவற்றால் நம் கணினியின் வேகம் குறைய அதிக வாய்ப்பு இருக்கின்றது.இவைகளை க்ளீன் செய்ய உதவும். நாம்  அவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான காரியமாகும். அதற்கு உதவிசெய்யவே  Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணினியின் வேகத்தை அதிகபடுத்தும்.
மேலும் அறிய இங்கே.

Comments

4 Responses to “கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருட்கள்”
Post a Comment | Post Comments (Atom)

Riyas said...

பயனுள்ள மென்பொருட்கள் எல்லாமே நன்றி பகிர்விற்கு..

June 22, 2010 at 8:38 PM
Murli said...

நன்றி அன்பரே..

June 22, 2010 at 10:01 PM
Btc Guider said...

//பயனுள்ள மென்பொருட்கள் எல்லாமே நன்றி பகிர்விற்கு.//

நன்றி Riyas

June 22, 2010 at 10:25 PM
Btc Guider said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Murli ...

June 22, 2010 at 10:27 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails