நபிகள் காட்டிய பாதை

Thursday, October 29, 2009

இன்றைய உலக வழக்கில் ஒவ்வொருவரும் தத்தம் பெயருக்கு முன் "இனிஷல்" -பெயரின் முதல் எழுத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.அது அவரை பெற்ற தந்தையுடைய பெயரின் முதல் எழுத்தாகும்.இனிஷல் இல்லாமல் மொட்டையாகப் பெயரைக் குறிப்பிடும்போது "இன்னார்" என்று அறிந்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடும்.இன்னும் ஒரு படி கூடுதலாக சில பகுதிகளில் தம் வீட்டு பெயரை -வகையராவைக் குறிக்கும் முதல் எழுத்தையும் தந்தையுடைய முதல் எழுத்தையும் இணைத்து இனிஷலாக பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக ஆர்.கே.அப்துல்காதிர் என்ற பெயரிலுள்ள முதல் எழுத்து,ராமபட்டினம் வகையரா என்பதிலுள்ள முதல் எழுத்து 'ரா' ஆங்கிலத்தில் 'R' என்றும் அடுத்து தந்தை பெயர் காதர் முதிய்யுத்தீன் என்பதிலுள்ள முதல் எழுத்து 'கா' ஆங்கிலத்தில் 'K' என்றும் இனிஷலாக் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக அன்றாட நடைமுறைப் பழக்கத்தில் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்கலாகட்டும்,அல்லது தனிப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக எழுதிக் கொள்ளும் பாண்டு பத்திரங்கலாகட்டும், அதில் இன்ன ஊரை சேர்ந்த இன்னார் மகன் இன்னார் என்றும் பெண்ணாக இருந்தால் இன்னார் மகள் இன்னாள் என்றும்,இன்னார் மனைவி என்றும் குறிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த நடைமுறை எதோ உலக வழக்கில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு பொதுவான எல்லாராலும் ஏறக்கபபத்ட ஒரு நரைமுறை என்றும்,புனித இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் யாரும் கருதிவிடக்கூடாது.

ஒருவரைக் குறிப்பிடும் பொது அவருடைய பெயருக்கு முன்னாள் அவரைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நடைமுறை நாகரீகத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.

உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நாயகத் தோழர் ஹள்ரத் அபுதர்தாஉ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். (ஆதார நூல்கள் அஹ்மத்,அபூதாவுத்).

ஆக, இப்போது நடைமுறையில் இருந்து வரும் இனிஷல் நாகரீகம் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய நாகரீகம் தான்.என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் மூலம் ஒரு முஸ்லீம் ஆணோ-பெண்ணோ தன்னைப் பெற்றெடுத்த தந்தையுடைய பெயரின் முதல் எழுத்தையே தன் இனிஷலாக பயன்படுத்தவேண்டும். இதுதான் இஸ்லாமிய நாகரீகம், ஷரியத்தின் நடைமுறை என்பது தெளிவாக விளங்குகின்றது. இந்த நாகரீகம் அரபு நாடுகளிலும், மற்றும் முஸ்லீம் நாடுகளிலும் முறையாகப் பேணப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த உண்மையை ஒரு இஸ்லாமிய மாதப் பத்திரிக்கையில் வெளி வந்த சவூதியிலுள்ள அதன் வாசகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் உறுதி படுத்துவதைக் காணலாம். அவர் எழுதுகிறார். தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் தன் பெயருக்கு முன் கணவனின் பெயரில் வரும் முதல் எழுத்தையே இனிஷலாகப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சவூதியிலோ ஒரு பெண் குமரியானாலும்,திருமணமாகி ஒருவரின் மனைவியானாலும் அவர் தந்தையின் வாரிசாகவே அழைக்கப்படுகின்றார்!

நாம் வாழும் தமிழ்நாட்டில் துரதிர்ஷ்ட வசமாக முஸ்லிம்களில் சிலரோ -பலரோ ஒரு பெண்ணை மனமுடித்தவுடன் அது வரை அவள் பயன்படுத்தி வந்த அவளுடைய தந்தையின் இனிஷலை- பெயர் முதல் எழுத்தை தூர எறிந்துவிட்டு தான் உபயோகித்து வரும் தன்னுடைய இனிஷலை அல்லது தன் பெயரின் முதலெழுத்தை அவளுடைய பெயருக்கு முன் திணித்து விடுவதை நாகரீகமாக கருதி செயல்பட்டு வருகின்றனர்.அதற்க்கு இவர்கள் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டால் அவள் கணவனுக்குத் தான் சொந்தம். அவள் தந்தைக்கு அவள் மீது எந்த உரிமையும் இல்லை என்று தெரிந்தோ - தெரியாமலோ கருதிக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

காரணம் உங்கள் தந்தைமார்களுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு மறுமையில் நீங்கள் அழைக்கப் படுவீர்கள் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவிப்பு ஒரு பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கு அவளை ஒருவருக்கு மன முடித்துக் கொடுத்த கையோடு அவரது சொந்தமும் பந்தமும் முற்றுப் பெறுவதில்லை, மாறாக அவள் உயிரோடு வாழும் காலம்மட்டுமல்ல , மறுமையிலும் பெற்றவரின் சொந்தமும் , பந்தமும் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

தவிர தன் கணவனின் இனிஷளில் உலா வந்துக் கொண்டிருக்கும் ஒரு மனைவி தன் கணவன் இறந்துவிட்டாலோ அல்லது அவன் விவாகரத்து செய்து விட்டாலோ அல்லது அவனிடமிருந்து (குலஃ) மணவிலக்குப் பெற்றுக் கொண்டாலோ தொடர்ந்து அவனது இனிஷளில் உலா வர முடியாது. பிறகு வேறொருவரை மணமுடித்து அந்த கணவனின் இனிஷலில்..........! இப்படியே நிரந்தரமில்லாத இனிஷலில் ஒரு பெண்ணை உலா வரச் செய்வது கொஞ்சமும் நாகரீகமல்ல.

ஒரு ஆணுக்கு அவரது தந்தையின் பெயர் முதல் எழுத்து - இனிஷல் நிரந்தரமாக இருப்பது போன்றே ஒரு பெண்ணுக்கும் அவளது தந்தையின் பெயர் முதல் எழுத்து - இனிஷலே நிரந்தரமானதாகும். எனவே தான் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி என்று பாரபட்சம் காட்டாமல் ஆணோ - பெண்ணோ அவரவர் தந்தையின் பெயர் முதலெழுத்தை இனிஷலாகப் பயன்படுத்த சொல்லிய வழிகாட்டி, அதன் மூலம் அழகான முன் மாதிரியை நல்லதோர் நாகரீகத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அடுத்து பெண்களில் சிலர் தம் பெயர்களுக்குப் பின்னால் தம் கணவர்களின் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்வதை ஒரு நாகரீகமாகக் கருதி செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். தாங்கள் மணமானவர்கள் இன்னாருடைய மனைவி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக இப்படி செய்வதாக இருந்தால் அது ஏற்புடைய செயலாகக் கருத முடியாது. காரணம், எந்த ஆணும் தன் பெயருக்குப் பின்னால் தன் மனைவியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆணுக்கு இப்படியொரு தேவையில்லை என்கிற நிலையில் பெண்ணுக்கு மட்டும் அப்படியொரு தேவையை திணிக்க வேண்டுமா? என்பது குறித்து அறிவுலகம் சிந்திக்க வேண்டும்.

புனித இஸ்லாத்தில் எந்தப் பெண்ணின் மீதும் அவளது திருமணத்துக்குப் பின் அவள் கணவுடைய பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று விதி எதையும் ஏற்படுத்தவில்லை என்பதி உணர வேண்டும். புனித ஷரிஅத் ஏற்படுத்தியுள்ள இந்த அழகான நடைமுறைகளைப் புரிந்து விளங்கி, ஏற்று நடக்க வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

தொகுத்து வழங்கியவர். மவ்லவி,ஹாபிழ் ஆர்.கே.அப்துல்காதிர் பாகவி. இவர்கள் திருக்குர்-ஆன் மற்றும் நபிமொழி மொழிபெயர்ப்பாளர்.
துணைத்தலைவர்,நகர ஜமாஅத்துல் உலமா
பள்ளபட்டி.

உடல்
நலக் குறைவால் வீட்டோடு இருக்கின்றார்கள்.அவர்களுக்காக து செய்யுங்கள். உங்களுக்கு ஷரிஅத்தில் ஏதாகினும் சந்தேகம் இருந்தால் அவர்களை தொடர்பு கொள்ளலாம், சந்தேகமற்ற தெளிவான விளக்கம் கிடைக்கும். அவர்களை தொடர்பு கொள்ள -: 04320 - 241498 -: 91-9841170687

குறிப்பு:-
(அண்மையில் கீழக்கரை பள்ளிவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான 16,17,18 ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டில் "பெண்கள் அரபிய முறைபடி தந்தை பெயரைக் கூறி அவரது மகள் என்றே எழுதப்பட்டுள்ளனர்"-மணிச்சுடர்)

Comments

4 Responses to “நபிகள் காட்டிய பாதை”
Post a Comment | Post Comments (Atom)

மிக அருமையான பதிவு முஜிபுர்ரஹ்மான். இங்கு (சௌதியில்) நீங்கள் விளக்கியிருப்பதுபோல் தான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

மவ்லவி,ஹாபிழ் ஆர்.கே.அப்துல்காதிர் பாகவி அவர்கள் விரைவில் உடல்நலம் தேறி வருவதற்கு வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்

October 29, 2009 at 2:10 PM
Btc Guider said...

நன்றி S.A. நவாஸுதீன் உங்களை போன்ற நண்பர்களின் துவாக்கல்தான் அவர்களை நலம் பெறச்செய்யும்.
தனக்காக செய்யும் துவாவைவிட மற்றவர்களுக்காக செய்யும் துவா உடனே கபூலாகும்.
அல்ஹம்துலில்லாஹ்.

October 29, 2009 at 2:32 PM
Yousufa said...

சரியான கருத்து. நானும் நடைமுறையில் இதையே பின்பற்றுகிறேன். ஆனால் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் இந்திய முறைப்படி கணவர் பெயரைச் சேர்ப்பது தவிர்க்க இயலாதது.

November 2, 2009 at 11:52 AM
Btc Guider said...

அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு சில சமயங்களில் கணவர் பெயரை சேர்ப்பது தவிர்க்க இயலாது.நம் வாழும் இடம் மற்றும் சூழ்நிலைகேற்ப வாழவேண்டியுள்ளது.

November 2, 2009 at 2:49 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails