இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்

Wednesday, December 1, 2010

காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தளம் சிறந்து விளங்கும். Depositfiles தளம் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஒரு சில குறைகளை நீக்கிவிட்டார்களேயானால் File Hosting தளத்தில் முன்னணிக்கு வந்துவிடும்.

இன்று முத்தான மூன்று தளங்களை பார்ப்போம்.

1 .Hotfile
சில ஆண்டுகளாகவே Upload செய்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான தளம். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே இந்த தளம் பணம் சம்பாதிக்க மிக சிறந்த தளமாக இருக்கின்றது.
இந்த தளத்தில் தினமும் 5 GB வரை Remote Upload செய்யலாம்.(Remote Upload பற்றி ஏற்கனவே பலமுறை விளக்கியுள்ளேன் மேலும் சில விசயங்களை பதிவின் இறுதியில் பார்க்கலாம்)

இந்த தளத்தின் முக்கிய குறை Rank தான். அதேசமயம் மிக பயனுள்ள விசயமும் இந்த Rank தான். கீழேயுள்ள படத்தை பாருங்கள் புரியும்.
அதிகமான தரவிறக்கம் கிடைத்தால் நம்முடைய Rank கும் அதிகமாகும்.

Premium Account வைத்திருப்பவர்களில் அதிகமானோர் Hotfile லில் உள்ளனர்.எனவே Hotfile லில்  Upload செய்தால் தரவிறக்கம் நிச்சயம். அதேசமயம் Premium Account இல்லாதவர்கள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்தபின்னர் அடுத்த தரவிறக்கத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் Upload செய்யும் கோப்புகளுக்கு காலவரையறை கிடையாது.சில கோப்புகளை புகாரின் அடிப்படையில் அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில் செய்துவிடுவார்கள்.

2. Fileserve
இந்த தளத்தை பற்றி ஏற்கனவே இதற்க்கு முந்தய இரண்டு பதிவுகளில் விளக்கியுள்ளேன்.இந்த தளம் தற்சமயம் அனைவராலும் மிகவும் விரும்பபடுகின்ற தளங்களில் ஒன்று, இந்த தளத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. வேறு எந்த File Host டிங்கும் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்ததாக இல்லை. இந்த தளத்தை ஆரம்பித்து  சில மாதங்களே ஆகியுள்ள நிலைமையில் இன்று இதனுடைய Alexa Rank  - 121.

நம்முடைய கோப்புகளை சேமித்து வைப்பதற்கு 500 GB வரை இடம் கிடைக்கின்றது. இதிலும் கோப்புகளுக்கு காலவரையறை கிடையாது, சில கோப்புகளை புகாரின் அடிப்படையில் அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில் செய்துவிடுவார்கள், 500 GB க்கும் மேல் சென்றால் உங்கள் கோப்புகளில் எவையவை கடந்த 30 நாட்களாக தரவிறக்கம் ஆகவில்லையோ அவைகளை அகற்றிவிடுகிறார்கள், நீங்கள் Premium கணக்கு வைத்திருந்தாள் எவ்வளவு கோப்புகள் வேண்டுமானாலும் சேமித்துக்கொள்ளலாம்.

இந்த தளத்திலும் Premium Account உள்ளவர்கள் அதிகமுள்ளனர். Premium கணக்கு இல்லாதவர்கள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்க செய்ய காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவே  அதிகமான தரவிறக்கம் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த மாதம் தளத்தை Upgrade அடிக்கடி செய்ததால் சில சமயம் தரவிறக்கம் செய்பவர்களுக்கு தொந்தரவாக இருந்தது, தேவையான அளவிற்கு Upgrade செய்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது எனவே இதன் வளர்ச்சி இன்னும் சில நாட்கள் தொடரும்.

எந்த ஒரு தளமும் அதன் வளர்ச்சிக்காக பணத்தை அள்ளிக் கொடுக்க தயங்குவதில்லை, அதே சமயம் வளர்ந்துவிட்டால் அதனிடமிருந்து பணம் சம்பாதிப்பது கம்மியாகிவிடும்,(இதற்க்கு எடுத்துக்காட்டு Rapidshare சில மாதங்களாக  நீத்மன்றங்களின் வழக்கால் இன்று மிகவும் பின்தங்கிவிட்டது. இந்த தளம் இன்னும் சிறிது காலத்தில் காணாமல் போய்விடும் என்பது என் தனிப்பட்ட கருத்து.)

எனவே இந்த சமயம் சம்பாதிக்க ஏற்ற தளமாக இருக்கின்றது. சரியாக பயன் படுத்திக்கொள்ளுங்கள், ஒருசிலர் 200 க்கும் அதிகமான கோப்புகளை Upload செய்து பணம் ஏதும் சம்பாதிக்காமல் உள்ளனர்.ஏதேனும் உதவி தேவையெனில் gtalk மூலமாக அழைக்கலாமே.............!

3. Filesonic

இந்த தளம் கடந்த மூன்று மாதங்களில் சில பல குளறுபடிகளில் இருந்து மீண்டுவந்துள்ளது.தற்சமயம் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.முந்தய குளறுபடிகளால் பலர் இந்த தளத்தை தவிர்த்துவிட்டார்கள்.மீண்டும் பழைய வாடிக்கையாளர்களை பெற சிறிது காலமாகலாம்.இந்த தளத்தில் கோப்புகளுக்கு காலவரையறை 30 நாட்கள் மட்டுமே இந்த குறையும் இல்லாமலிருந்தால் Fileserve போன்று இந்த தளம் வேகமாக வளர வாய்ப்புள்ளது.

நண்பர்களே நீங்கள் Upload செய்து பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களின் link குகளை கொடுங்கள் ஒவ்வருவருக்கும் ஒரு தளம் பிடித்திருக்கும். அவர்களுக்கு பிடித்த தளத்தின் லிங்க் இருந்தால் உங்களுக்கு தரவிறக்கம் அதிகமாக இருக்கும்.நான் மூன்று முதல் ஆறு தளங்களின் லிங்க் குகளை கொடுக்கின்றேன், எனவே எனக்கு அதிகமான தரவிறக்கம் ஆகுவதால் பணமும் அதிகமாக கிடைக்கின்றது.

பணம் சம்பாதிக்க விரும்புவோர் கீழே உள்ள என்னுடைய Referral மூலமாக இணையுங்கள் மேலும் பல நுணுக்கமான விசயங்களை gtalk மூலமாக உங்களுக்கு கிடைக்கும். சந்தேகம் உள்ளவர்கள் gtalk மூலமாக தொடர்புகொள்ளவும். சந்தேகத்தை தீர்க்க எனக்கு வசதியாக இருக்கும்.
Hotfile.com -        Alexa Rank - 62
Fileserve.com-     Alexa Rank -121
Filesonic.com-      Alexa Rank - 309
Depositfiles.com- Alexa Rank -168
Oran.com-            Alexa Rank -1,102
Easy-share.com-  Alexa Rank -1,002
Uploading.com-    Alexa Rank - 412
Join-Duckload -   Alexa Rank-1514
Premium கணக்கு இல்லாமல் Remote Upload செய்வதை பற்றி ஒரு சிலருக்கு கூறியுள்ளேன் மிக நன்றாக செய்கின்றார்கள். மேலும் பலர் தொடர்புகொண்டு தங்களின் வருமானத்தை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். கண்டிப்பாக Referral மூலமாக இணைந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். புதியதாக இணைபவர்கள் தொடர்புகொண்டபின்னர் இணையுங்கள்.

என்னுடைய gtalk ID

gtalk மூலமாக தொடர்புகிடைக்காதவர்கள் மெயிலிடுங்கள். ஏனெனில் எனக்கும் தற்சமயம் அதிகமாக வேலைகள் உள்ளன, சில சமயம் இணையத்தில் இல்லாமல் போகலாம்.கருத்துகளை மட்டுமே பின்னூட்டமிடுங்கள். சந்தேகத்தை பின்னூட்டத்தில் கேட்காதீர்கள்,gtalk மூலமாக கேளுங்கள்.

நன்றி.

Comments

One response to “இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails