இணையத்தில் பணம் பாகம் 3

Tuesday, March 9, 2010


தினமும் பல நண்பர்கள் இணைந்தவண்ணம் உள்ளீர்கள். புதியதாக இந்த பதிவை படிப்பவர்கள் பழைய பதிவுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

பல நண்பர்கள் போனிலும் மெயில் மூலமாகவும் தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றார்கள். சந்தேகம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.

நான் Upload (நான் Upload செய்யும் தளங்கள் Rapidshare.com ,Depositfiles.com ,Hotfile.com ,Uploading.com ,Megaupload.com ,Easy -share.com ) செய்து வெளியிடுவதால் மாதம் குறைந்தது எட்டாயிரம் ரூபாய் (8000.00) சம்பாதிக்கின்றேன். இதை ஒரு பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்தது இப்பொழுது ஓரளவு வருமானம் வருகின்றது. எனக்கு சொல்லிகொள்கின்ற அளவுக்கு ஆங்கில அறிவு கிடையாது, நானே இவ்வளவு இணையத்தில் வருமானம் ஈட்டும்போது உங்களால் பன்மடங்கு அதிகமாக சம்பாதிக்க முடியும். எனக்கு தெரிந்த ஒரு சில வழிகளை உங்களுக்கு சொல்கின்றேன். நீங்கள் இந்த வழிகளை சரியாக தொடர்ந்தால் நான் உங்களிடம் பழகும் காலம் வெகு விரைவில் வந்துவிடும். மேலும் பல புதிய வழிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.
சமீபத்தில் ஒரு நண்பர் சென்னையிலிருந்து தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு folderland.com மில் சந்தேகத்தை கேட்டார். நானும் எனக்கு தெரிந்தவைகளை கூறினேன். அன்று மாலை folderland.com மில் உள்ள அவருடைய வலைப்பூவை பார்த்தேன். புதியதாக folderland.com மிற்கு வரும் நபர் போல் தெரியவில்லை அவ்வளவு அருமையாக பதிவிட்டுள்ளார். உங்களுடைய திறமைகளை சரியாக வெளிப்படுத்துங்கள். அதன் பலன் கூடிய சீக்கிரம் தெரியவரும்.

வேறுஒரு நண்பர் கேட்டிருந்தார் நான் Upload செய்துவிட்டேன் ஆனால் இன்னும் ஒரு முறை கூட டவுன்லோட் ஆகவில்லையே என்று!

நீங்கள் Upload செய்தால் மட்டும் போதாது அதை மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் வெளியிடுங்கள். உங்கள் படைப்புகளை வெளியிடத்தான் folderland.com மை அறிமுகப்படுத்தியுள்ளேன். அதில் சில நாட்கள் பழகுங்கள் அதில் தேறிவிட்டால் அடுத்த உலக பிரசித்தி பெற்ற வலைத்தளங்களை அறிமுகப் படுத்தும்போது பதிவிட இலகுவாக இருக்கும்,தடுமாற்றமும் குறையும். folderland.com மில் ஆர்வத்துடன் பதிவிட்டால் அதை விட்டு உங்களால் வெளிவரமுடியாது. அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

folderland.com மில் இணைய

வேறுபல மிகப் பிரபலமான வலைத்தளங்களை அறிமுகப் படுத்தும்போது உங்கள் மெயில்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே என் மூலம் இணைந்த அன்பர்கள் தங்கள் மெயில் ID மற்றும் user name அனுப்பிவையுங்கள்.பலர் இன்னும் தங்களது மெயில் ID யை அனுப்பவில்லை அனுப்பாதவர்கள் உடனே அனுப்புங்கள்.

நான் தினமும் ஒரு மணி நேரம் பதிவிடுவதற்கு செலவிடுகின்றேன். இதுவரை இரண்டாயிரத்திற்கு மேல் பல வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளேன்.
ஒரு சிலர் நீங்கள் சொன்னவாறு Upload செய்து வெளியிட்டுள்ளேன் ஆனால் சிலமுறை மட்டுமே டவுன்லோட் ஆகியுள்ளது வருமானமு ஒரு பைசா இரண்டு பைசா என்றுதானே வருகின்றது என்று?

நீங்கள் அதிகமான கோப்புகளை பதிவிடவேண்டும் உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் உங்கள் தளத்திலேயே இருக்கும் வண்ணம் பல பதிவுகள் இருக்க வேண்டும் ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். மற்ற வலைத்தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி அதில் நீங்கள் வெளியிடும்போது ஆர்வம் தன்னால் வந்துவிடும்.

இந்த இடத்தில் உங்களுக்கு என் சமீபத்திய பதிவை பற்றி சொல்லணும்.

இதற்க்கு முந்தய பதிவான சூப்பர் இணைய தொலைகாட்சி

தமிழிஷில் வெளியிட்டேன், இந்த பதிவிற்கு ஆறு ஓட்டும் என்பது visiters சும் பெற்றுள்ளது. இதே பதிவை வேறு தளங்களில் பதிவிட்டேன் எத்தனை முறை தரவிறக்கம் ஆகியுள்ளது தெரியுமா?இரண்டு வெவ்வேறு தளங்களில் Upload செய்து வெளியிட்டேன்.

படம் பெரியதாக தெரிய படத்தின் மீது சுட்டவும்.

என்னுடைய பதிவுகளிலேயே குறுகிய காலத்தில் அதிகமான முறை தரவிறக்கம் செய்யப் பட்ட மென்பொருள் இதுதான்.

இது போன்ற பல மென்பொருள்கள் வலைத்தளங்களில் கிடைக்கின்றன. எங்கு கிடைக்கும் என்ற பல விசயங்களில் வரும் பதிவுகளிலோ அல்லது உங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ உங்களுக்கு தெரியப் படுத்தப்படும்.

அதிகமான நண்பர்கள் Hotfile.com மில் இணைந்துள்ளீர்கள் Depositfiles .com மில் ஒரு சிலர் மட்டுமே, Hotfile.com மை விட நான் Depositfiles.com மை விரும்புகின்றேன் இதில் பல வசதிகள் இருக்கின்றன.அவைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Upload செய்யும் கோப்பு 5 MB க்கு குறையாமல் 100 MB க்கு அதிகமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கோப்புகளை Depositfiles.com மில்Upload செய்யுங்கள். மேலும் இது பற்றிய விசயங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

முக்கிய விஷயம் : ஒரு IP விலாசத்திலிருந்து இரண்டு கணக்குகளை Upload செய்யும் தளங்களில் உருவாக்க வேண்டாம். உங்கள் கணக்குகளை முடக்க வாய்ப்பிருக்கின்றது.

இலவச premium கணக்கை பெறுவது எப்படி,Rapidshare ரில் எவ்வாறு கணக்கை உருவாக்குவது,வேகமாக Upload செய்வது எப்படி(நான் ஒரு 700 MB உள்ள படத்தை இரண்டு தளங்களில் Upload செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் நாற்பது நிமிடம் மட்டுமே) வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Hotfile.com மில் இணைய
Depositfile.com மில் இணைய
Uploading.com மில் இணைய
Paypal.com மில் இணைய

Comments

No response to “இணையத்தில் பணம் பாகம் 3”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails