இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி.

Friday, September 10, 2010


அன்புடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமுன் அழைக்கும்.

ஒரு மாத காலம் இறைவன் கட்டளையை ஏற்று நோன்பு இருந்து கெட்டவைகளை தவிர்த்து  நல்ல செயல்களை மட்டுமே செய்து இறைவனின் பேரன்புக்கு ஆளாகி இருக்கும் இந்த பொன்னானா நாளில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றோமோ அது போல் அனைத்து நாட்களிலும் நாம் சந்தோசமாக இருக்க இறைவன் கட்டளையை தவறாமல் நிறைவேற்றினாலே போதும்.

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள்.

கடந்த இரண்டு மாத காலமாக பதிவு எதுவும் போடவில்லை என்று பல நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டவன்னமாக உள்ளானர் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

சில சொந்த வேலையின் காரணமாக பதிவுகள் எழுத முடியவில்லை. அடுத்ததாக ரமலான் மாதம் வந்துவிட்டது இந்த சிறந்த மாதத்தின் கடமைகளை செய்ய வேண்டிய கடமைகள் உள்ளதால் இணையத்தின் பக்கம் வர முடியவில்லை.

இந்த சிறப்பான தினத்தில் ஒரு அருமையான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.

என்னடைய சிங்கபூர்  நண்பர் முஸ்தபா சமீபத்தில் ஒரு ஈ-மெயில் அனுப்பியிருந்தார்.
ஒரு தளத்தின் முகவரியை கொடுத்து அதனை பற்றிய விளக்கங்களுடன் இருந்தது.

அந்த தளத்தை பற்றி பார்ப்போம்.

தளத்தின் பெயர் :- http://tanzil.info/

இஸ்லாமியர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான தளம். இந்த தளந்த்தில் குர்-ஆன் முழுவதும் விளக்கங்களுடன் உள்ளன Play செய்து கேட்கும் வசதியும் உள்ளது.


 படத்தை பெரியதாக பார்க்க இங்கே சுட்டவும்.

சுமார் 80 க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு.23 காரிகளின் ஓதுதலை கேட்கும் வசதி.ஓடும்போதே அதன் விளக்கத்தை அறிந்துகொள்ளும் வசதி (தமிழும் உள்ளது) மேலும் பல வசதிகள் உள்ள இந்த தளத்தை ஒரு முறை இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் அந்த தளத்தின் அனைத்து சிறப்புகளையும் அறிந்துகொள்ளமுடியும்.

குர்-ஆன் பற்றிய அறிந்து கொள்ள ஆசைபடும் மற்ற மதத்து நண்பர்களுக்கும் மிக பயனளிக்கும் இந்த தளத்தை முடிந்தவரை அனைத்து நண்பர்குளுக்கும் அறிமுகப்படுந்துங்கள்.

Comments

4 Responses to “இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி.”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

நண்பரே உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள் அணைவருக்கும் என் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்....

September 11, 2010 at 2:06 PM
Riyas said...

நல்ல அருமையான பதிவு ரஹ்மான்..
குரான் பற்றிய தளம் பயனுள்ள தகவல்
தொடருங்கள்..

September 12, 2010 at 9:20 AM
Anonymous said...

மிகவும் உபயோகமாக இருக்கின்றது.நன்றி

jeeva flora (a)jeeva ayisha

October 3, 2010 at 11:04 AM

வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும்.

October 21, 2010 at 2:15 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails