Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

ப்லாஷ் குர்-ஆன்

Tuesday, November 3, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்
ஏற்கனவே பதிவிட்டுள்ள விஷுவல் குர்-ஆனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இது ப்லாஷ் குர்-ஆன்.







































இன்று
ப்லாஷ் குர்-ஆன் கொடுத்துள்ளேன். இந்த ப்லாஷ் குர்-ஆன் 56 MB மட்டுமே, குர்-ஆனை பார்த்து ஓதுவதற்கு ஏற்றது,

ஆனால் ஏனோ பலர் விசுவல் குர்-ஆனை முழுவதுமாக தரவிறக்கம் செய்யவில்லை. சுமார் பத்து நபர்களுக்கு மேல் முதல் பாகத்தை தரவிறக்கம் செய்துள்ளனர்.ஐந்தாம் பாகத்தை இரண்டு நபர்கள் மட்டுமே தரவிறக்கியுள்ளனர். ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்தால் மட்டுமே முழு பயனடைய முடியும். மொத்தம் 700 MB கொண்டது. இந்த விஷுவல் குர்-ஆன் மிக அறிய குர்-ஆன் பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

ப்லாஷ் குர்-ஆன் தரவிறக்கம் செய்ய
சந்தேகம் ஏதும் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

நபிகள் காட்டிய பாதை

Thursday, October 29, 2009

இன்றைய உலக வழக்கில் ஒவ்வொருவரும் தத்தம் பெயருக்கு முன் "இனிஷல்" -பெயரின் முதல் எழுத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.அது அவரை பெற்ற தந்தையுடைய பெயரின் முதல் எழுத்தாகும்.இனிஷல் இல்லாமல் மொட்டையாகப் பெயரைக் குறிப்பிடும்போது "இன்னார்" என்று அறிந்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடும்.இன்னும் ஒரு படி கூடுதலாக சில பகுதிகளில் தம் வீட்டு பெயரை -வகையராவைக் குறிக்கும் முதல் எழுத்தையும் தந்தையுடைய முதல் எழுத்தையும் இணைத்து இனிஷலாக பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக ஆர்.கே.அப்துல்காதிர் என்ற பெயரிலுள்ள முதல் எழுத்து,ராமபட்டினம் வகையரா என்பதிலுள்ள முதல் எழுத்து 'ரா' ஆங்கிலத்தில் 'R' என்றும் அடுத்து தந்தை பெயர் காதர் முதிய்யுத்தீன் என்பதிலுள்ள முதல் எழுத்து 'கா' ஆங்கிலத்தில் 'K' என்றும் இனிஷலாக் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக அன்றாட நடைமுறைப் பழக்கத்தில் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்கலாகட்டும்,அல்லது தனிப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக எழுதிக் கொள்ளும் பாண்டு பத்திரங்கலாகட்டும், அதில் இன்ன ஊரை சேர்ந்த இன்னார் மகன் இன்னார் என்றும் பெண்ணாக இருந்தால் இன்னார் மகள் இன்னாள் என்றும்,இன்னார் மனைவி என்றும் குறிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த நடைமுறை எதோ உலக வழக்கில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு பொதுவான எல்லாராலும் ஏறக்கபபத்ட ஒரு நரைமுறை என்றும்,புனித இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் யாரும் கருதிவிடக்கூடாது.

ஒருவரைக் குறிப்பிடும் பொது அவருடைய பெயருக்கு முன்னாள் அவரைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நடைமுறை நாகரீகத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.

உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நாயகத் தோழர் ஹள்ரத் அபுதர்தாஉ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். (ஆதார நூல்கள் அஹ்மத்,அபூதாவுத்).

ஆக, இப்போது நடைமுறையில் இருந்து வரும் இனிஷல் நாகரீகம் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய நாகரீகம் தான்.என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் மூலம் ஒரு முஸ்லீம் ஆணோ-பெண்ணோ தன்னைப் பெற்றெடுத்த தந்தையுடைய பெயரின் முதல் எழுத்தையே தன் இனிஷலாக பயன்படுத்தவேண்டும். இதுதான் இஸ்லாமிய நாகரீகம், ஷரியத்தின் நடைமுறை என்பது தெளிவாக விளங்குகின்றது. இந்த நாகரீகம் அரபு நாடுகளிலும், மற்றும் முஸ்லீம் நாடுகளிலும் முறையாகப் பேணப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த உண்மையை ஒரு இஸ்லாமிய மாதப் பத்திரிக்கையில் வெளி வந்த சவூதியிலுள்ள அதன் வாசகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் உறுதி படுத்துவதைக் காணலாம். அவர் எழுதுகிறார். தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் தன் பெயருக்கு முன் கணவனின் பெயரில் வரும் முதல் எழுத்தையே இனிஷலாகப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சவூதியிலோ ஒரு பெண் குமரியானாலும்,திருமணமாகி ஒருவரின் மனைவியானாலும் அவர் தந்தையின் வாரிசாகவே அழைக்கப்படுகின்றார்!

நாம் வாழும் தமிழ்நாட்டில் துரதிர்ஷ்ட வசமாக முஸ்லிம்களில் சிலரோ -பலரோ ஒரு பெண்ணை மனமுடித்தவுடன் அது வரை அவள் பயன்படுத்தி வந்த அவளுடைய தந்தையின் இனிஷலை- பெயர் முதல் எழுத்தை தூர எறிந்துவிட்டு தான் உபயோகித்து வரும் தன்னுடைய இனிஷலை அல்லது தன் பெயரின் முதலெழுத்தை அவளுடைய பெயருக்கு முன் திணித்து விடுவதை நாகரீகமாக கருதி செயல்பட்டு வருகின்றனர்.அதற்க்கு இவர்கள் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டால் அவள் கணவனுக்குத் தான் சொந்தம். அவள் தந்தைக்கு அவள் மீது எந்த உரிமையும் இல்லை என்று தெரிந்தோ - தெரியாமலோ கருதிக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

காரணம் உங்கள் தந்தைமார்களுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு மறுமையில் நீங்கள் அழைக்கப் படுவீர்கள் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவிப்பு ஒரு பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கு அவளை ஒருவருக்கு மன முடித்துக் கொடுத்த கையோடு அவரது சொந்தமும் பந்தமும் முற்றுப் பெறுவதில்லை, மாறாக அவள் உயிரோடு வாழும் காலம்மட்டுமல்ல , மறுமையிலும் பெற்றவரின் சொந்தமும் , பந்தமும் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

தவிர தன் கணவனின் இனிஷளில் உலா வந்துக் கொண்டிருக்கும் ஒரு மனைவி தன் கணவன் இறந்துவிட்டாலோ அல்லது அவன் விவாகரத்து செய்து விட்டாலோ அல்லது அவனிடமிருந்து (குலஃ) மணவிலக்குப் பெற்றுக் கொண்டாலோ தொடர்ந்து அவனது இனிஷளில் உலா வர முடியாது. பிறகு வேறொருவரை மணமுடித்து அந்த கணவனின் இனிஷலில்..........! இப்படியே நிரந்தரமில்லாத இனிஷலில் ஒரு பெண்ணை உலா வரச் செய்வது கொஞ்சமும் நாகரீகமல்ல.

ஒரு ஆணுக்கு அவரது தந்தையின் பெயர் முதல் எழுத்து - இனிஷல் நிரந்தரமாக இருப்பது போன்றே ஒரு பெண்ணுக்கும் அவளது தந்தையின் பெயர் முதல் எழுத்து - இனிஷலே நிரந்தரமானதாகும். எனவே தான் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி என்று பாரபட்சம் காட்டாமல் ஆணோ - பெண்ணோ அவரவர் தந்தையின் பெயர் முதலெழுத்தை இனிஷலாகப் பயன்படுத்த சொல்லிய வழிகாட்டி, அதன் மூலம் அழகான முன் மாதிரியை நல்லதோர் நாகரீகத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அடுத்து பெண்களில் சிலர் தம் பெயர்களுக்குப் பின்னால் தம் கணவர்களின் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்வதை ஒரு நாகரீகமாகக் கருதி செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். தாங்கள் மணமானவர்கள் இன்னாருடைய மனைவி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக இப்படி செய்வதாக இருந்தால் அது ஏற்புடைய செயலாகக் கருத முடியாது. காரணம், எந்த ஆணும் தன் பெயருக்குப் பின்னால் தன் மனைவியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆணுக்கு இப்படியொரு தேவையில்லை என்கிற நிலையில் பெண்ணுக்கு மட்டும் அப்படியொரு தேவையை திணிக்க வேண்டுமா? என்பது குறித்து அறிவுலகம் சிந்திக்க வேண்டும்.

புனித இஸ்லாத்தில் எந்தப் பெண்ணின் மீதும் அவளது திருமணத்துக்குப் பின் அவள் கணவுடைய பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று விதி எதையும் ஏற்படுத்தவில்லை என்பதி உணர வேண்டும். புனித ஷரிஅத் ஏற்படுத்தியுள்ள இந்த அழகான நடைமுறைகளைப் புரிந்து விளங்கி, ஏற்று நடக்க வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

தொகுத்து வழங்கியவர். மவ்லவி,ஹாபிழ் ஆர்.கே.அப்துல்காதிர் பாகவி. இவர்கள் திருக்குர்-ஆன் மற்றும் நபிமொழி மொழிபெயர்ப்பாளர்.
துணைத்தலைவர்,நகர ஜமாஅத்துல் உலமா
பள்ளபட்டி.

உடல்
நலக் குறைவால் வீட்டோடு இருக்கின்றார்கள்.அவர்களுக்காக துஆ செய்யுங்கள். உங்களுக்கு ஷரிஅத்தில் ஏதாகினும் சந்தேகம் இருந்தால் அவர்களை தொடர்பு கொள்ளலாம், சந்தேகமற்ற தெளிவான விளக்கம் கிடைக்கும். அவர்களை தொடர்பு கொள்ள -: 04320 - 241498 -: 91-9841170687

குறிப்பு:-
(அண்மையில் கீழக்கரை பள்ளிவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான 16,17,18 ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டில் "பெண்கள் அரபிய முறைபடி தந்தை பெயரைக் கூறி அவரது மகள் என்றே எழுதப்பட்டுள்ளனர்"-மணிச்சுடர்)

குர்-ஆன்

Thursday, October 22, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு அருமையான தகவல்.
சிலர் கணினியின் முன்பு அதிக நேரம் இருப்பவர்களாக நம்மில் பலர் உள்ளனர்.அவர்களுக்காகவே இந்த பதிவு இன்று நான் எடுத்துக் கொண்டது குர்-ஆன் பற்றியது.
இன்றைய காலகட்டத்தில் குர்-ஆன் ஓத தெரிந்தவர்கள் சரிவர குர்-ஆனை ஓதுவது கிடையாது.கேட்டால் நேரம் கிடைப்பதில்லை என்று சாக்கு போக்கு சொல்லிகொள்கிறோம். குர்-ஆன் ஓதுவது எவ்வளவு சிறப்பு என்று நான் சொல்லத் தேவை இல்லை ஏனெனில் இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
குர்-ஆன் ஓதுவதை கூட நாம் காது கொடுத்து கேட்பதுமில்லை.எனவே என்னை போன்ற பலரும் பயன்பெறும் வகையில் உதவக்கூடிய இந்த விசுவல் குர்-ஆனை உங்களுக்கு அளிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன். குர்-ஆனை மனனம் செய்த ஹாபிஃல்களுக்கு மிக மிக உதவும் என்றும் நம்புகின்றேன். குர்-ஆன் ஓதும்போது கீழே மலாய் அல்லது ஆங்கிலத்தில் விளக்கம் வரும்.
கீழே உள்ள காணொளியை பாருங்கள்.





தயவுசெய்து இஸ்லாமிய நண்பர்களுக்கு இந்த விஷயத்தை எத்திவையுங்கள்.இந்த குர்-ஆன் மிக அறிய ஒன்று.

கீழே உள்ள சுட்டியை தட்டி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

Link1

Link2

Link3

Link4

Link5

Link6

Link7

Pass: tamilbazaar.blogspot.com

தரவிறக்கம் செய்தவர்கள் CD யில் காப்பி செய்து கணினியில் உபயோகியுங்கள்.உங்களுக்கு எதாகினும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

தரவிறக்கம் செய்பவர்கள் ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்யுங்கள் ஏனெனில் ஒரு சிலர் முதல் பாகத்தை மட்டும் தரவிறக்கம் செய்கின்றனர்.ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்தால் மட்டுமே முழுமையடையும்.
தரவிறக்கம் செய்தபின்னர் எப்படி விரிவிபடுத்துவது என்பதை காண இங்கே.

தொழுகையை தவறவிடாமல் இருக்க மென்பொருள்

கஃபத்துல்லாஹ்

Thursday, October 15, 2009

ஈத் முபாரக்

Sunday, September 20, 2009

அனைவருக்கும் என் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும், என்னுடைய மனங்கனிந்த இனிய நோன்புப் பெருநாள் (ஈத் முபாரக்) நல்வாழ்த்துகள்.






ஒரு ஹதீஷ் உள்ளது யார் சொன்னது என்று சரியாக தெரியவில்லை ."இறைவன் மூன்று நபர்களுடைய துஆக்களை எந்த தங்கு தடையும் இன்றிஏற்றுகொள்கின்றான்.

முதலாமவர் : அநீதி இளைக்கப்பட்டவருடய துஆ
இரண்டாமவர் : நீதமுடைய அரசன் செய்யும் துஆ
மூன்றாமவர் : நோன்பாளி உடைய துஆ "

எனவே அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் கபூல் செய்வானாக (ஏற்றுக்கொள்வானாக)
ஒரு மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பிருந்த அன்பு சகோதர சகோதரிகளே உங்களின் அனைத்து ஆகுமான துஆக்களையும் இறைவன் கபூல் செய்வானாக. ஆமீன்.

தொழுகையை தவறவிடாமல் இருக்க மென்பொருள் (பாங்கு)

Monday, September 14, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ரமலான் மாதத்தின் சிறபபுகளை பற்றி நண்பர்கள் பலர் விரிவாக எழுதியுள்ளனர்.நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிறிய அவாதான் இந்த பதிவு.
நாம் சில சமயம் தொழுகையை நேரம் (வக்த்) தெரியாமல் தவற விட நேரிடுகின்றது நம் இஸ்லாத்தில் ஐந்து நேர தொழுகை எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.
தொழுகையை தவறவிடாமல் இருக்க ஒரு மென்பொருள் உள்ளது .இந்த மென்பொருள் ஐந்து நேரமும் பாங்கு (தொழுகை நேர அழைப்பு) சொல்லும். அதை வைத்து தொழுகையை நாம் தவறாமல் நிறைவேற்றிட வழிவகுக்கும்.மேலும் இதிலுள்ள சிறப்பம்சம் குரான் முழுவதும் பார்த்து ஓதக் கூடிய வகையில் இருக்கின்றது.மிக சிறிய மென்பொருளில் இவ்வளவு பெரிய பயன் இருக்கின்றது,
எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயனடையுங்கள்,தெரிந்தவர்களுக்கும் இந்த விஷயத்தை எத்திவையுங்கள்.

தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


Related Posts with Thumbnails