
முதல் வரம் - யுத்தம் இல்லாத உலகம்,
இரண்டாவது வரம் - ரகசியம் இல்லாத உள்ளம்,
மூன்றாவது வரம் - வலிகள் இல்லாத வார்த்தை,
நான்காவது வரம் - வயதுக்கு சரியான வாழ்க்கை,
ஐந்தாவது வரம் - பாசாங்கு இல்லாத பாசம்,
ஆறாவது வரம் - தானே உறங்கு விழி,
ஏழாவது வரம் - துக்கம் மறந்த தூக்கம்,
எட்டாவது வரம் - மனிதர்க்கெல்லாம் ஒரு மனம்,
ஒன்பதாவது வரம் - ஊருக்கெல்லாம் ஒரு நதி,
பத்தாவது வரம் - நன்றி கெடாத நட்பு.

